பொன்முடி மீது மேலும் 2 வழக்குகள் பதிவு
சென்னை:
முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி மீது மேலும் 2 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகுந்து கலாட்டா செய்ததாகக் கூறி பொன்முடி,விழுப்புரம் நகராட்சித் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்துகடலூர் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் பொன்முடியின் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொன்முடியின் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்ய முயன்றபோது போலீஸாரைத் தடுத்து,அவர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கடலூர் சிறைச் சாலைக்குள் நுழையாமல் தன்னைத் தடுத்து தனது கடமையை செய்யவிடாமல் பொன்முடி இடையூறு செய்ததாக விழுப்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின்அடிப்படையில் இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
மொத்தம் 511 திமுகவினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


