டெல்லி கிளம்பினார் ஷெகாவத்
சென்னை:
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்த துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத் இன்று காலை டெல்லி கிளம்பினார்.
நேற்று முன்தினம் மாலை சென்னைக்கு வந்தார் ஷெகாவத். அன்று இரவே ராஜஸ்தானிய சங்கங்கள்நடத்திய பாராட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார்.
இந்நிலையில் "கலாஷேத்ரா" நிறுவனரான ருக்மணி அருண்டேலின் நூற்றாண்டு விழாவில் நேற்றுகாலை கலந்து கொள்ள ஷெகாவத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் நேற்று காலை திடீரென்று அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்றுஅவர் முழுவதுமாக நன்றாக ஓய்வெடுத்தார்.
இதையடுத்து நேற்று மாலை ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்ட ஷெகாவத், இன்றுகாலை தனி விமானத்தில் டெல்லிக்குக் கிளம்பினார்.
தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதா சார்பாக நிதி அமைச்சர் பொன்னையன்,தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் ஆகியோர்ஷெகாவத்தை அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.


