ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் வாதாட சு. சுவாமி விருப்பம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் வாதாட தன்னை அனுமதிக்கவேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போவதாக ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக ரூ.66.65 கோடிசொத்துக்களைச் சேர்த்ததாக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தற்போது அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் சொத்துக் குவிப்புவழக்கின் விசாரணை தனி நீதிமன்றத்தில் சூடுபிடித்தது. மிகவும் விறுவிறுப்பாக நடந்தவிசாரணையில் சாட்சிகள் அனைவரும் விசாரிக்கப்பட்டு விட்டனர். குற்றம் சாட்டப்பட்டஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரும் சாட்சியம்அளித்து விட்டனர்.
அடுத்த ஒரு சில நாட்களில் இவ்வழக்கின் தீர்ப்பு வெளிவந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் இடைக்காலத் தடை விதித்தது. திமுகபொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கமும் சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையைஒத்திவைத்தார்.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் வாதாட தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போவதாக சுவாமி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர்நிருபர்களிடம் பேசுகையில்,
ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடர்ந்ததே நான்தான்.
மாநில அரசால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞரை இவ்வழக்கில் ஆஜராக அனுமதிக்கக் கூடாதுஎன்று அன்பழகன் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் தடைசெய்துள்ளது.
அவர் கூறுவது சரிதான். அதனால் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் என்னை இவ்வழக்குதொடர்பாக வாதாட அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் கோரவுள்ளேன்.
இது தொடர்பாக அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்வேன்.
சாத்தான்குளத்தில் காங்கிரசைப் புறக்கணித்த வாக்காளர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
காஷ்மீருக்கு அடுத்தபடியாக அல்-கொய்தா தீவிரவாதிகள் தமிழகத்தில் நடமாடுவதாகத் தெரிகிறது.இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு துணைப் பிரதமர் அத்வானிக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
தமிழகத்திற்குத் தீராத பிரச்சனைகளாக இருந்து வரும் சேது சமுத்திரம் திட்டம் குறித்தோ,கங்கை-காவிரி இணைப்பு குறித்தோ பட்ஜெட்டில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இது மிகவும்வேதனை அளிக்கிறது என்றார் சுவாமி..


