வீரப்பன் விவகாரம்: அதிரடிப்படையிடம் கிராம மக்கள் உறுதி
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தால் அதைஅதிரடிப்படையினரிடம் நிச்சயம் தெரிவிப்போம் என்று சேலம் அருகே உள்ள 2 கிராமங்களைச்சேர்ந்த மக்கள் கூறியுள்ளனர்.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட பின்னர் வீரப்பனைத்தேடும் வேட்டையை தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் தீவிரப்படுத்தினர்.
இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் தொடர்ந்து அதிரடிப்படையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே கிராம மக்களின் ஆதரவையும் அதிரடிப்படையினர் நாடியுள்ளனர். வீரப்பன்நடமாடும் வனப் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் அவர்கள்வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
அதன்படி சேலம் அருகே உள்ள நீதிபுரம் மற்றும் லக்கம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த மக்களைஅதிரடிப்படையினர் சந்தித்தனர். அப்போது வீரப்பன் நடமாட்டம் குறித்து தங்களுக்குத் துப்புசொல்ல வேண்டும் என்று அந்த மக்களிடம் அதிரடிப்படையினர் கேட்டுக் கொண்டனர்.
வீரப்பன் தலைக்கு ரூ.5.5 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதையும் அப்போது மக்களிடம்அதிரடிப்படை போலீசார் அடிக்கடி எடுத்துக் கூறினர்.
வீரப்பனைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களின் பெயர் குறித்த விவரங்கள் ரகசியமாகப்பாதுகாக்கப்படும் என்றும் கிராம மக்களிடம் அவர்கள் கூறினர்.
வீரப்பன் நடமாட்டம் குறித்த தகவல் தங்களுக்குத் தெரிய வந்தால் அவற்றை உங்களிடம் நிச்சயம்தெரிவிப்போம் என்று இரு கிராம மக்களும் அப்போது அதிரடிப்படையினரிடம் தெரிவித்தனர்.
தமிழக அதிரடிப்படை ஐ.ஜியான டி.கே. ராஜேந்திரனும் அப்போது அதிரடிப்படையினருடன்இருந்தார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications