அமெரிக்க விசா: புதிய விண்ணப்ப படிவங்கள் அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அமெரிக்கா செல்ல விசா பெற விரும்புவோருக்கு புதிய வகையான விண்ணப்பப் படிவங்கள் தரப்படவுள்ளன.
வரும் 17ம் தேதிமுதல் இந்த புதிய விண்ணப்பங்களை அமெரிக்கத் தூதரகம் அறிமுகப்படுத்தவுள்ளது.
17ம் தேதிமுதல் இந்தியாவில் உள்ள அனைத்து அமெரிக்கத் தூதரகங்களிலும் இந்த புதிய வகை விண்ணப்பப்படிவங்கள் தான் பயன்படுத்தப்படும் என அமெரிக்கத் தூதரகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புகைப்படங்கள் தொடர்பாகவும் புதிய விதிமுறைகளும் அமலுக்கு வருகின்றன. இருப்பினும் பழையவிண்ணப்பப் படிவங்கள் மார்ச் 14ம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தகவல் அறிய விரும்புவோர் கீழ்க்காணும் இணையதளத்தை அணுகலாம்:
http://chennai.usconsulate.gov


Click it and Unblock the Notifications
