For Daily Alerts
Just In
9 அடி நீளம், 30 கிலோ எடை: மிகப் பெரிய பாம்பு பிடிபட்டது
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே உள்ள நடுகல்லூர் என்ற இடத்தில் 9அடிநீளமும், 30 கிலோ எடையும்கொண்ட மிகப் பெரிய பாம்பு பிடிபட்டது.
நடுகல்லூர் பகுதியில் மிகப் பெரிய பாம்பு சில நாட்களாகத் திரிந்தது. இதை.டுத்து மாவட்டவனத்துறை அதிகாரி ரவீந்திரநாதனுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பாம்பைப் பிடிக்க வனத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்றனர். அவர்களில் குணசேகரன் என்றஊழியர் பாம்பின் மீது விழுத்து அதை மடக்கிப் பிடித்தார். பயங்கரமாக சீறிய அந்தப் பாம்பைலாவகமாகப் பிடித்துவிட்டார்.
மற்ற ஊழியர்களின் உதவியுடன் கோணிப் பையில் அந்தப் பாம்பு அடைக்கப்பட்டது. அதன் நீளம் 9அடியாகும்.
சுமார் 30 கிலோ எடையுடன் இருந்தது.
அந்தப் பாம்பை காட்டுப் பகுதிக்குள் கொண்டு போய் விட வனத்துறை முடிவு செய்துள்ளது.


