பி.எச். பாண்டியன் பதவி பறிப்பு: ஜெ. அதிரடி
சென்னை:
நாடாளுமன்ற அதிமுக தலைவர் பி.எச். பாண்டியன் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.மக்களவை அதிமுக தலைவர் பதவியிலிருந்தும் அவர் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சபாநாயகராக இருந்தவர் பாண்டியன். "ஆனந்த விகடன்"பத்திரிக்கை ஆசிரியர் பாலசுப்ரமணியத்திற்குத் தண்டனை கொடுத்து சிறையில் தள்ளி, தனதுஅதிகாரம் வானளாவியது என்று நீதிமன்றத்துடனேயே மோதியவர்.
இந்நிலையில் அந்தப் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா தலைமையில்அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த அதிமுக எம்.பிக்கள் கூட்டத்தில் இந்த முடிவுஅறிவிக்கப்பட்டது.
பாண்டியனுக்குப் பதில், பி.ஜி. நாராயணன் புதிய தலைவராக செயல்படுவார். நாராயணன்தற்போது ராஜ்யசபா அதிமுக தலைவர் பதவியையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற அதிமுக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராசிபுரம் எம்.பியான சரோஜாவேமக்களவை அதிமுக தலைவராகவும் செயல்படுவார்.
புதிய கொறடாவாக கோபிச்செட்டிப்பாளையம் எம்.பி. காளியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ராஜ்யசபா கட்சி செயலாளராக சயீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய மக்களவை அதிமுக நிர்வாகிகள்:
தலைவர் - சரோஜா
துணைத் தலைவர் - மலைச்சாமி
கொறடா - காளியப்பன்
பொருளாளர் - திண்டுக்கல் சீனிவாசன்
செயலாளர் - குமாரசாமி
புதிய ராஜ்யசபா அதிமுக நிர்வாகிகள்:
தலைவர் - நாராயணன்
துணைத் தலைவர் - மைத்ரேயன்
கொறடா - கோகுல இந்திரா
பொருளாளர் - எஸ்.எஸ். சந்திரன்
செயலாளர் - சையது கான்


