ஓடும் ரயிலிலிருந்து கைதி "எஸ்கேப்"
திண்டுக்கல்:
வேலூரிலிருந்து மதுரைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட கைதி திண்டுக்கல் அருகே ஓடும்ரயிலிலிருந்து குதித்துத் தப்பி ஓடிவிட்டான்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவன் ராமமூர்த்தி. பலமுறை சிறை சென்றுள்ள இவன்,சமீபத்தில் ஒரு வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில்அடைக்கப்பட்டிருந்தான்.
வழக்கு விசாரணைக்காக அவ்வப்போது அவனை வேலூருக்குக் கொண்டு சென்று வந்தனர்போலீசார்.
அதேபோல வழக்கு விசாரணைக்காக ரயில் மூலம் அவனை போலீசார் பலத்த பாதுகாப்புடன்மதுரையிலிருந்து வேலூர் அழைத்துச் சென்றனர். பின்னர் விசாரணை முடிந்ததும் மதுரைக்குஅவனை அழைத்து வந்தனர்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தை ரயில் நெருங்கியபோது திடீரென்று ரயிலிலிருந்து கீழே குதித்து தப்பிவிட்டான் ராமமூர்த்தி. இருளில் மறைந்து அவன் ஓடியதால் அவன் எந்தப் பக்கமாகத் தப்பி ஓடினான்என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது தொடர்பாக திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடியகைதியைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


