For Daily Alerts
Just In
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: 2 பேர் பலி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் நடந்த 2 ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் மாடுகள் முட்டி 2 பேர் இறந்தனர்.
கீரனூர் அருகே உள்ள அல்லூர் என்ற கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. 200க்கும் மேற்பட்டோர்அங்கு கூடியிருந்தனர்.
அப்போது சீறி வந்த காளை ஒன்று முட்டியதில் ஒருவர் தூக்கி எறியப்பட்டு பலியானார். அவர் யார்என்பது தெரியவில்லை.
அதேபோல அத்தனகோட்டை கிராமத்தில் நடந்த மற்றொரு ஜல்லிக்கட்டு சம்பவத்தில் மாடு முட்டி40 வயது மதிக்கத்தக்க நபர் இறந்தார். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


