ராணி மேரி கல்லூரியை இடிக்கும் முடிவை எதிர்த்து மேலும் 3 வழக்குகள்
சென்னை:
ராணி மேரி கல்லூரி விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் 3 மனுக்கள்தொடரப்பட்டுள்ளன. இவற்றின் மீதான விசாரணை இன்று நடக்கிறது.
ராணி மேரி கல்லூரியை இடிக்கக் கூடாது என்று கோரி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம்சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவின் அடிப்படையில், கல்லூரியை இடிக்க உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் இடைக்காலத் தடை விதித்தார்.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 3 மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. ராணி மேரி கல்லூரி மாணவிகள் சங்கத் தலைவி அர்ச்சனா காந்தன், திமுகமாணவர் அணித் தலைவர் சத்யபால், பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலைராஜேந்திரன் ஆகியோர் இம்மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கியமுதல் டிவிஷன் பெஞ்ச் இம்மனுக்களை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது அரசு வழக்கறிஞரான என்.ஆர். சந்திரன் கூறுகையில்,
ராணி மேரி கல்லூரி இடிக்கப்படும் என்று தமிழக அரசின் கொள்கை முடிவாகத்தான் சட்டசபையில்அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்விவகாரத்தில் வழக்கு தொடர முடியாது. நீதிமன்றமும்தலையிட முடியாது.
மேலும் இந்தப் பிரச்சனையை சில கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன. அவற்றின் தூண்டுதல்காரணமாகத்தான் மாணவிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இளம் தலைமுறையினர் எளிதில்உணர்ச்சி வசப்பட்டுபவர்கள். நீங்களும் நானும் கூட மாணவர்களாக இருந்தவர்கள்தான்.தங்களுக்குள் ஒரு ஒழுக்கம் இருக்க வேண்டும்.
நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தும் மாணவிகள் தொடர்ந்து கல்லூரிக்குள் போராடி வருவதுநீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.
ஒரே நேரத்தில் போராட்டமும் வழக்கும் எவ்வாறு நடக்க முடியும்? இவ்வழக்கில் விரிவானவிளக்கம் தரும் வகையில் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றார் சந்திரன்.
கல்லூரியை இடிக்க முடிவெடுத்து விட்டீர்களா என்று அப்போது நீதிபதி கலிபுல்லா கேட்டார். "ஆம்"என்று ஒரே வார்த்தையில் இதற்குப் பதிலளித்தார் சந்திரன்.
இதையடுத் நீதிபதிகள் வழக்கை செவ்வாயக்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.


