கல்லூரி மாணவிகளின் உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ்
சென்னை:
சென்னை ராணிமேரிக் கல்லூரி மாணவிகள் கடந்த 4 நாட்களாக நடத்தி வந்த உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ராணிமேரிக் கல்லூரியை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அமர்ந்து மாணவிகள்உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்தனர். கல்லூரி மூடப்பட்டபோதும், விடுதிகள் மூடப்பட்டு உணவகமும் மூடப்பட்டபோதும் இந்தப்போராட்டம் தொடர்ந்தது.
வெறும் டீயைக் குடித்துவிட்டு அரை பட்டினியுடன் அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந் நிலையில் கல்லூரியை இடிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததாலும் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவருவதாலும் உள்ளிறுப்புப் போராட்டத்தை வாபஸ் பெறு மாணவிகள்முடிவு செய்துள்ளனர்.
இருப்பினும் கல்லூரிமூடப்பட்டிருந்தால் மரத்தடியில் அமர்ந்து அவர்கள் பாடம் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆசிரியைகள்மரத்தடியிலேயே பாடம் நடத்தி வருகின்றனர்.
வரும் 23ம் தேதி தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் இந்த அராஜகத்தில் அரசு ஈடுபட்டு மாணவிகளை மரத்தடியில் உட்காரவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி வளாகத்திற்குள் உள்ள டாய்லெட்டுகளைக் கூட கல்லூரியின் புதிய முதல்வர் ராஜலட்சுமி மூட உத்தரவிட்டுள்ளார். இதற்குமாணவிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அடிப்படை மனிதாபிமான உரிமைகளைக் கூட அரசு தங்களுக்கு மறுப்பதாக அவர்கள் கொந்தளிப்புடன் கூறினர்.


