For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

""போலீசார் என்னைக் கொன்று விடுவார்கள்"": பொடா நீதிபதியிடம் "நக்கீரன்" கோபால் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

"என்னைப் போலீஸ் காவலில் வைக்க அனுமதித்தால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.போலீசார் என்னை சித்திரவதை செய்து கொன்று விடுவார்கள்" என்று பொடா சிறப்பு நீதிமன்றநீதிபதியிடம் "நக்கீரன்" ஆசிரியர் கோபால் கூறினார்.

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கோபால் இன்று முதல் முறையாகசென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதங்கள் கடத்தியது, தனித் தமிழ்நாடு அமைக்க முயற்சித்ததுஉள்ளிட்ட பல வழக்குகளின் அடிப்படையில் கடந்த 11ம் தேதி இரவு கோபாலை சி.பி.சி.ஐ.டி.போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கோபால் மீதான வழக்குகள் அனைத்தும் 15ம் தேதி பொடா வழக்குகளாக மாற்றப்பட்டன.இதையடுத்து அவர் அன்றே பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனஎதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் போலீஸ் உளவாளி ராஜாமணி கொலை வழக்கு தொடர்பாக சத்தியமங்கலம் போலீஸ்நிலையம், கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றம் என கோபால் அலைக்கழிக்கப்பட்டார்.

இதனால் பொடா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படவில்லை. சென்னை மத்திய சிறையிலேயேஅடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பொடா நீதிமன்றத்தில் இன்று காலை கோபால் ஆஜர்படுத்தப்பட்டார். பொடாசட்டத்தின் கீழ் கோபால் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை அப்போது போலீசார் நீதிபதிராஜேந்திரனிடம் தாக்கல் செய்தனர்.

மேலும் கோபாலை மேலும் விசாரிப்பதற்காக போலீஸ் காவலில் அனுமதிக்குமாறு சி.பி.சி.ஐ.டி.போலீஸ் அதிகாரியான நாகராஜன் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார். ஆனால் போலீஸ்காவலில் செல்வதற்கு கோபால் மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நீதிபதியிடம்கூறுகையில்,

வீரப்பனுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியதாகக் கூறி திமுக தலைவர் கருணாநிதி, கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரைக் கைது செய்ய தமிழக அரசு முயற்சித்துவருகிறது.

இது தொடர்பாக விசாரிப்பதற்காகவே என்னைப் போலீஸ் காவலில் வைக்க வேண்டும் என்றுபோலீசார் கோருகின்றனர்.

ஆனால் போலீஸ் காவலில் நான் வைக்கப்பட்டால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. போலீசார்என்னை சித்திரவதை செய்து கொன்று விடுவார்கள். எனவே இதற்கு நீதிபதி அனுமதி அளிக்கக்கூடாது என்று நீதிபதியிடம் கோபால் கூறினார்.

இதையடுத்து இவ்வாறு கூறியதையும் தன்னுடைய கோரிக்கையையும் எழுத்துப் பூர்வமாக எழுதிக்கொடுக்குமாறு கோபாலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

எழுத்துப் பூர்வமாக கோபால் மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்று பிற்பகல் அடுத்தகட்டவிசாரணையை நீதிபதி ராஜேந்திரன் தொடர்ந்து நடத்துவார்.

பொடா கைது சரியே- ஜெ.:

இதற்கிடையே கோபாலை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது சரியே என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.

எதிர்க் கட்சியினரையும் பத்திரிக்கையாளர்களையும் பொடா சட்டத்தைக் காட்டி மிரட்டி வருவதாகசட்டசபையில் இன்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் புகார் கூறின. கோபாலை பொடாசட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்று கூறிய அக்கட்சி எம்.எல்.ஏக்கள்,இதனால் பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும் கூறினர்.

இதற்குப் பதிலளித்து ஜெயலலிதா பேசுகையில், லைசன்ஸ் இல்லாமல் சட்டவிரோதமாக துப்பாக்கிவைத்திருந்ததாலேயே கோபால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பொடாசட்டத்தின் 4வது பிரிவு இதை அனுமதிக்கிறது.

மேலும் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்கங்களுடன் கோபால் தொடர்பு வைத்திருந்தார்.இதன் மூலம் அந்த இயக்கங்களுக்கு ஏராளமான பணப் பரிமாற்றமும் நடத்தியுள்ளார் கோபால்.

அந்தத் தீவிரவாத இயக்கங்களை ஆதரித்ததோடு நில்லாமல் தனித் தமிழ்நாடு உருவாக்கவும்கோபால் முயன்றுள்ளார். எனவேதான் அவர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் போலீஸ் உளவாளியான ராஜாமணி கொலை சம்பவத்திலும் அவர் சம்பந்தப்பட்டுள்ளார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X