For Daily Alerts
Just In
தாத்தாவின் வாழ்க்கை வரலாறை எழுதிய சிறுமி: "லிம்கா" சாதனை
வேலூர்:
இந்திய அளவில் சாதனை புந்தவர்களுக்கான லிம்கா சாதனையாளர் புத்தகத்தில் வேலூரைச் சேர்ந்த12 வயது சிறுமி காதம்பரி விஸ்வநாதனின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
9ஆம் வகுப்பு படித்து வரும் காதம்பரியின் சாதனை என்ன தெரியுமா? தன் தாத்தா விஸ்வநாதன்குறித்த வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை எழுதியதுதான்.
சுமார் 80 பக்கங்களில் இந்தப் புத்தகத்தை அருமையாக எழுதியுள்ளார் காதம்பரி.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் எம்.பியாக இருந்தவர்தான் விஸ்வநாதன்.தற்போது வேலூர் தொழில்நுட்பக் கழகத்தின் வேந்தராக உள்ளார் இவர்.


