ரூ.1 கோடி பணத்துடன் மோசடிக் குடும்பம் "எஸ்கேப்"
சென்னை:
சீட்டுப் பணமாக பொதுமக்களிடம் வசூலித்த ரூ.1 கோடி பணத்துடன் ஒரு குடும்பமேதலைமறைவாகி விட்டது.
வியாசர்பாடியில் வசித்து வந்தவர் சாண்டியாகோ. இவரது மனைவி மைக்கேல் அம்மாள்.சாண்டியாகோவும், அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் சேர்ந்து அப்பகுதியில்உள்ளவர்களிடம் சீட்டு சேர்ப்பதாகக் கூறி பணம் வசூல் செய்து வந்தனர்.
அவர்களின் ஐஸ் ஒழுகும் பேச்சில் மயங்கி ஏராளமான பெண்கள், தங்களது
வீடுகளுக்குத் தெரியாமல் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தனர். இப்படியே சாண்டியாகோகுடும்பத்திற்கு ரூ.1 கோடி வரை பணம் சேர்ந்து விட்டது.
சீட்டு பிடிப்பது தவிர சாண்டியாகோ வேறு தொழிலும் செய்து வந்தார். அப்பகுதியில் பிளாட்டுகள்கட்டித் தருவது, வீடு கட்டித் தருவது உள்ளிட்ட காண்டிராக்ட் வேலையும் செய்துவந்தார். அதில்பெருத்த நஷ்டம் ஏற்படவே என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கினார்.
இந்நிலையில் சாண்டியாகோவின் வீடு கடந்த 2 நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. அக்கம்பக்கத்தில் கேட்டபோது அந்த வீட்டையும், தனது பிசினசையும் சாண்டியாகோ விற்று விட்டு சென்றுவிட்டதாகக் கூறினார்கள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.சாண்டியாகோ குடும்பத்தினரை போலீஸார் வலை வீசித் தேடி வருகிறார்கள்.


