For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கி அதிகாரிகள் ஸ்டிரைக்: தமிழகத்தில் பணிகள் முடங்கின

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

சம்பள உயர்வு கோரி நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டனர். இதனால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் வங்கிப் பணிகள் ஸ்தம்பித்துப் போயின.

பாங்க் ஆப் பரோடா, புதிய தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் தவிர 26வங்கிகளைச் சேர்ந்த 2.5 லட்சம் வங்கி அதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர்.

அகில இந்திய அளவில் 3 சங்கங்களைச் சேர்ந்த வங்கி அதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டனர். ஆனால் அகில இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இன்றைய வேலைநிறுத்தத்தில்பங்கேற்கவில்லை. இருந்தாலும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்பதாக அவர்கள் கூறினர்.

வங்கி அதிகாரிகள் இன்று நடத்தி வரும் வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் வங்கிப்பணிகள் ஸ்தம்பித்துப் போயின. குறிப்பாக, இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில்வங்கிப் பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டன. டெல்லி மற்றும் கொல்கத்தாவிலும் வங்கிப் பணிகள்பாதிக்கப்பட்டிருந்தன.

அதேபோல் தமிழகத்தில் உள்ள வங்கிகளிலும் பணிகள் முடங்கின. அனைத்து வங்கிகளும்திறந்திருந்தாலும் கூட பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன.

வங்கி அதிகாரிகளின் கையெழுத்து இல்லாமல் டிராப்ட்டுகள் உள்ளிட்டவற்றைப் பெற முடியாதுஎன்பதால் பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஏற்கனவேநேற்று விடுமுறை என்பதால் இன்று வங்கிகளில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் போனதால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குச்சம்பளம் அளிக்க முடியாமல் திணறிப் போயின.

இதற்கிடையே சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தின் முன்பாகவங்கி அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.பாண்டிச்சேரியிலும் சுமார் 1,000 வங்கி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் ஜூன் மாதம் காலவரையற்றபோராட்டத்தில் ஈடுபடத் தயங்க மாட்டோம் என அப்போது அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்தஒருநாள் வேலைநிறுத்தத்தால் ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X