"அதிமுக" இருளை அகற்றி "திமுக" அகல் தீபம் ஏற்றுவோம்: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் தற்போது சூழ்ந்துள்ள இருளை அகற்றி, திமுக ஆட்சி என்ற அகல் தீபத்தை ஏற்றுவோம்என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு சென்னை புரசைவாக்கம் பகுதியில் நேற்று திமுக பொதுக் கூட்டம் நடந்தது.இதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகையில், தமிழகத்தை தற்போது இருள் சூழ்ந்துள்ளது.
அதிமுக ஆட்சி என்ற இந்த இருளை அகற்றி விட்டு திமுக ஆட்சி என்ற அகல் விளக்கை ஏற்றவேண்டிய நேரம் வந்துள்ளது. அதற்கு திமுகவினரும், மற்ற பிரிவினரும் தயாராக இருக்கவேண்டும்.
பொருத்தமான நேரம் வரும்போது சரியான முறையில் மக்கள் செயல்பட வேண்டும். தமிழகத்தில்ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கேள்வி கேட்டால் உள்ளே தள்ளி விடுகிறார்கள்.
பத்திரிக்கைக்காரர்கள்தான் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 32 அவதூறுவழக்குளைப் போட்டுள்ளது இந்த அதிமுக ஆட்சி.
அண்ணாவின் ஆட்சியில் தொழிலாளர்களுக்கு மே 1ம் தேதி விடுமுறை கொடுத்தது. அதற்குப் பிறகுவந்த எனது ஆட்சியில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அதை மாற்றினேன்.
ஆனால் இப்போது வந்துள்ளஆட்சியிலோ இருக்கிற வேலையையும் பறித்துக் கொண்டுதொழிலாளர்களை நடு ரோட்டில் அமர வைத்துள்ளார்கள் என்றார் கருணாநிதி.


