கிணற்றில் விழுந்த சிறுத்தை: மீட்க அதிரடிப்படை முயற்சி
சத்தியமங்கலம்:
வீரப்பன் நடமாட்டம் உள்ள தாளவாடி பகுதியில் ஒரு மிகப் பெரிய வறண்ட கிணற்றுக்குள் சிறுத்தை தவறிவிழுந்தது.
அதை மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
அதை மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
காட்டுப் பகுதியை ஒட்டி கப்புல்வளை கிராமத்தில் இந்த மிகப் பெரிய கிணறு உள்ளது. கிட்டத்தட்ட 100 அடிஆழமும் 20 அடி சுற்றளவும் கொண்ட இந்தக் கிணறு வற்றிப் போயுள்ளது. உள்ளே பாறைகளும் இடுக்குகளுமாககாட்சியளிக்கும் இந்த கிணற்றுக்குள் நேற்றிரவு தவறி விழுந்தது.
திரும்பி மேலே வர முடியாமல் தவித்த இந்த சிறுத்தை பயங்கரமாக சத்தம் எழுப்ப, மிக தூரத்தில் இருந்தவீடுகளிலும் அந்த ஒலியைக் கேட்க முடிந்தது. இதையடுத்து அப் பகுதி மக்கள் ஒன்றாகத் திரண்டு வர,கிணற்றுக்குள் இருந்து சத்தம் வந்ததைக் கேட்டு அதில் டார்ச் அடித்துப் பார்த்தனர்.
உள்ளே ஆக்ரோஷத்துடன் அந்த சிறுத்தை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. இதையடுத்து இரவோடு இரவாகஅப் பகுதியில் உள்ள அதிரடிப்படையினரின் முகாமுக்கு (வீரப்பனைப் பிடிக்கும் படை) சென்ற பொது மக்கள்விஷயத்தைக் கூற போலீசாரையும், ஒரு விலங்கு மருத்துவ டாக்டரையும் அழைத்துக் கொண்டுஅதிரடிப்படையினர் விடிகாலையில் அங்கு வந்தனர்.
தன்னிடம் இருந்த மயக்க ஊசியை சிறுத்தை மீது எறிந்து அதை மயக்கமாக்கும் முயற்சியில் டாக்டர் ஈடுபட்டார்.பல முயற்சிகளுக்குப் பின் அந்த ஊசி சிறுத்தையைக் குத்தியது. ஆனாலும் அது மயக்கமடையவில்லை.
கொஞ்சமாய் தடுமாறியபடி கிணற்றை சுற்றி வந்தது. இதையடுத்து சில அதிரடிப்படை வீரர்களுடன் உடலில்கயிற்றைக் கட்டிக் கொண்டு பாதி தூரம் கிணற்றில் இறங்கினார் டாக்டர். ஆனால், அவரை நோக்கி சிறுத்தை சீறவேஉடனே மேலே கொண்டு வரப்பட்டுவிட்டார்.
இன்னும் கிணற்றிலேயே சிக்கியுள்ள அந்த சிறுத்தைக்கு மாமிசமும் சில கோழிகளும் உணவாகப் போடப்பட்டன.
இப்போது வால்பாறை, பொள்ளாச்சியில் இருந்து கூடுதல் கால்நடை மருத்துவர்களையும், விலக்குகளைப்பிடிக்கும் எக்ஸ்பர்ட்களையும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிணற்றில் சிறுத்தை சிக்கியது அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


