""அதிமுக விரைவில் சுக்கு நூறாக உடையும்"": இளங்கோவன்
நாகர்கோவில்:
டான்சி வழக்கில் தீர்ப்பு வெளியானவுடன் அதிமுக சுக்கு நூறாக சிதறி விடும் என்று தமிழககாங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
பிரதமர் கலந்து கொண்ட விமான நிலைய விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததன் மூலம்தமிழகத்திற்கு பெரும் அவமதிப்பை ஏற்படுத்தி விட்டார் முதல்வர் ஜெயலலிதா.
நாட்டின் பிரதமர், மூத்த தலைவர் என்ற வகையில் பிரதமரையும் அவர் அவமானப்படுத்தி விட்டார்.ஜெயலலிதாவின் அகம்பாவத்தையே இந்தச் செயல் எடுத்துக் காட்டுகிறது.
பிரச்சினை ஏதும் இருந்தால் அதை பேசித் தீர்க்க அவர் முயற்சித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு முக்கியமான விழாவில் கலந்து கொள்வதாகக் கூறி விட்டு புறக்கணித்தது மிகவும்கண்டிக்கத்தக்க செயலாகும்.
டான்சி வழக்கு தொடர்பான தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ளது. அது வந்த பிறகு அதிமுக சுக்குநூறாக உடைந்து சிதறி விடும். அதில் ஜெயலலிதா காணாமல் போய் விடுவார்.
அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசைக் கலைப்பதன் மூலம்தான்மக்களுக்கு விமோசனம் கிடைக்கும். எனவே அந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்துவதில் தவறேஇல்லை.
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. ஆனால்மாணவர்களின் கோரிக்கைகளை அரசு அக்கறை எடுத்துக் கொண்டு கையாளவில்லை என்றார்இளங்கோவன்.


