For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுடன் அமைதி ஒப்பந்தத்துக்குத் தயார்: பாக்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் தாக்குவதில்லைஎன்ற நிரந்தர அமைதி ஒப்பந்தம் கூட செய்து கொள்ள முடியும் என பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கூறினார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் டி.வியில் பேட்டியளித்த முஷாரப் கூறுகையில்,

இப்போது எங்களுடைய பாதுகாப்பு குறித்தே நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். எங்கள்பாதுகாப்புக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்றால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேபோர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

இதுதான் எங்களுடைய நிலை. காஷ்மீர் பிரச்சனை முழுவதுமாகத் தீர்க்கப்பட்டால் மட்டுமே அங்குமுழு அமைதி திரும்பும். அமைதி திரும்பினால் மட்டுமே இரு நாடுகளுமே தங்கள் படைகளைவாபஸ் பெற்றுக் கொள்ள முடியும்.

காஷ்மீர் பிரச்சனை தீர்ந்தால் எல்லையில் எங்கள் ராணுவத்தினரைக் குறைத்துக் கொள்ள நாங்கள்தயாராக உள்ளோம். இது தொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவும் நாங்கள்தயார்.

மேலும் காஷ்மீர் பிரச்சனை தீர்ந்தால்தான் பாகிஸ்தானும் இந்தியாவும் தாங்கள் வைத்துள்ள அணுஆயுதங்களைக் குறைத்துக் கொள்வது பற்றியும் யோசிக்க முடியும்.

சர்வதேச நாடுகளின் நெருக்குதல் காரணமாகவே தற்போது இரு நாடுகளும் பேச்சு நடத்த தயாராகஉள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. அது தவறு. யாரும் எங்களைக் கட்டாயப்படுத்தவில்லை.சிலர் இது தொடர்பாகத் தங்கள் ஆலோசனைகளை மட்டுமே அளித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு தற்போது ஒருபுதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

இரு நாடுகளைச் சேர்ந்த மக்களும் அவ்வாறுதான் நினைக்கின்றனர். அவர்களுடைய நலன் கருதியேபேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் முஷாரப்.

இந்திய துணை தூதருடன் சந்திப்பு:

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் ஒரு ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஷாரப்,அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்தியாவின் துணைத் தூதரான ராகவனை சந்தித்து கை குலுக்கிக்கொண்டார்.

"உங்கள் தலைவர் எப்போது பாகிஸ்தான் வருவார்?" என்று முஷாரப் கேட்க, "விரைவில் வருவார்.நாம் சந்தித்த விவரத்தை உடனே இந்திய அரசிடம் தெரிவிக்கிறேன்" என்று ராகவன் பதில் கூறினார்.

இன்று அனைத்துக் கட்சி கூட்டம்:

இதற்கிடையே இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதது குறித்து ஆலோசிக்கஇன்று மாலை எதிர்க் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் மிர் ஜாபருல்லா கான்ஜமாலி.

பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து இந்தியப் பிரதமர் வாஜ்பாயிடமிருந்து நல்ல பதில்வந்துள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே விரைவில்பேச்சுவார்த்தை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரில் குண்டு வெடிப்பு:

இதற்கிடையே பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தோடா பஸ் நிலையத்தில் தீவிரவாதிகள் வீசிய சக்தி வாய்ந்த கிரனைட் குண்டுவெடித்ததில் ஒருவர் பலியானார். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.

இன்று பகல் சுமார் 12 மணிக்கு இந்தத் தாக்குதல் நடைபெற்றது. தோடா பஸ் நிலையத்திற்கு வந்ததீவிரவாதிகள் கிரனைட் குண்டை வீசி எறிந்து வெடிக்கச் செய்தனர்.

சம்பவம் நடந்த இடத்திலேயே ஒரு பயணி பலியானார். சக்தி வாய்ந்த இந்தக் குண்டு வெடிப்பால்தோடா நகரமே அதிர்ந்தது. இச்சம்பவத்தில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேரின்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

குண்டு வெடிப்பு நடந்த இடத்தைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். வெடிகுண்டைஎறிந்த தீவிரவாதிகளை அவர்கள் தேடி வருகின்றனர். இந்த பஸ் நிலையத்திற்கு மிகவும் அருகில்தான்ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் தலைமை அலுவலகமும், போலீஸ் துணை கமிஷனர் அலுவலகமும் உள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே காஷ்மீரில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த 3லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் உள்பட 4 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

தோடா மாவட்டத்தில் சிலிவாலா கிராமத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த ஒமர் தின்என்பவரின் வீட்டில் தீவிரவாதிகள் கிரனைட் குண்டுகளை நேற்று மாலை வீசி எறிந்தனர். இதில் தின்காயமின்றி உயிர் தப்பினார்.

இந்நிலையில் காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாகஸ்ரீநகரில் உள்ள பல முக்கியப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் கண்காணித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X