For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இளைஞரின் உயிரை காவு வாங்கிய ஸ்டிரைக்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மருத்துவக் கல்லூ மாணவர்களுக்கு ஆதரவாக அரசு டாக்டர்கள் அறுவை சிகிச்சைகளைப் புறக்கணித்து வருவதால்மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் அரசு மருத்துவமனைகளில் இருந்து அனுப்பப்படும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய மாட்டோம் என தனியார்மருத்துவமனை டாக்டர்கள் சங்கமும் அறிவித்துவிட்டது.

சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால், மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட இளைஞர் பரிதாபமாகஇறந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்து...

நேற்று மாலை வேன் மூலம் கொடைக்கானல் சென்றபோது அந்த வேன் கவிழ்ந்ததில் காயமடைந்த உசிலம்பட்டியைச் சேர்ந்தஇளையராஜா என்பவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவருக்கு உடனடியாக அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய மறுத்து விட்டனர். கிட்டத்தட்ட 12 மணி நேரமாகியும் சிகிச்சைஅளிக்கப்படவில்லை. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போகுமாறு, இளையராஜாவின்உறவினர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் அதற்கு அவர்களிடம் வசதி இல்லாத காரணத்தால், இளையராஜா அதிக ரத்தம் வெளியேறி இன்று காலை பரிதாபமாகஉயிரிழந்தார். இதன் மூலம் அரசு டாக்டர்களின் போராட்டத்திற்கு முதல் பலி மதுரையில் விழுந்துள்ளது.

இந்தச் சாவை அறிந்த இளையராஜாவின் உறவினர்கள் மதுரை மருத்துவமனையில் கூடி நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவரது உடலை பிரதேப் பரிசோதனை நடத்தக் கூட டாக்டர்கள் இல்லை.

2,900 புதிய டாக்டர்கள்:

வரும் 21ம் தேதி முதல் டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் அதைச்சமாளிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 100 புதிய டாக்டர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் மாநிலம் முழுவதும் உள்ள 29 மாவட்டங்களிலும் புதிதாக 2,900 டாக்டர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

21ம் தேதி முதல் இந்த புதிய டாக்டர்கள் சேர்க்கை தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. இதற்காகடாக்டர்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகளை இப்போதே தொடங்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குதலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் உத்தரவிட்டுள்ளார்.

வேலைக்கு வராவிட்டால் அத்தியாவசியப் பணிகள் சட்டமான எஸ்மா பாயும் என அரசு எச்சரித்துள்ளது. இதையுமமீறி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் அரசு மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான அறுவைச் சிகிச்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

பாதியிலேயே டிஸ்சார்ஜ்:

மேலும், டாக்டர்கள் முழு அளவில் பணியில் இல்லாத காரணத்தால் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யுமாறும் அரசுஉத்தரவிட்டுள்ளது. இதனால் பல நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தப்பட்டு அவசர, அவசரமாக டிஸ்சார்ஜ்செய்யப்பட்டு வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் போதிய டாக்டர்கள் இருப்பதாகமருத்துவக் கல்வி இயக்குனர் ரவீந்திரநாத் தான் கூறிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. எப்போதும் நோயாளிகள்கூட்டத்தால் நிரம்பிக் காணப்படும் வார்டுகள் இப்போது காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன.

பலமுறை வந்தும் டாக்டர்கள் இல்லாததால் ஏமாந்து போன ஏழை மக்கள் அரசு மருத்துவமனைக்கு வருவதையேநிறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களில் ரத்து செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சைகளின் விவரம், ரத்துசெய்யப்பட்டதற்கான காரணம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட டாக்டர்கள் உடனே அனுப்பி வைக்க வேண்டும்என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அவர்களது விளக்கம் போதுமானதாக இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமாம். அதுவரைநோயாளி உயிரோடு இருப்பாரா? என்று தெரியவில்லை.

தனியார் டாக்டர்கள் மறுப்பு:

இதற்கிடையே அரசு டாக்டர்களுக்கு ஆதரவான நிலையை தனியார் மருத்துவமனை டாக்டர்களும் எடுத்துள்ளனர். அரசுமருத்துவமனைகளில் இருந்து அனுப்பப்படும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய மாட்டோம் என தனியார்மருத்துவமனை டாக்டர்கள் சங்கமும் அறிவித்துவிட்டது.

ஹால் டிக்கெட் விவகாரம்: அரசு பல்டி

-இதற்கிடையே, வரும் 15ம் தேதிக்குள் மருத்துவம மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்பாவிட்டால், ஜூன் மாதம் நடைபெறவுள்ள தேர்வுக்குரியஹால் டிக்கெட்டுகளை தர மாட்டோம் என்று கூறியிருந்த மருத்துவக் கல்வி இயக்குனர் ரவீந்திரநாத் இப்போது பல்டி அடித்துள்ளார்.

ஹால் டிக்கெட் தராவிட்டால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என மாணவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து மருத்துவ மாணவர்களின் வருகைப் பதிவேட்டு குறிப்புகள், ஹால் டிக்கெட்டுகள் போன்றவற்றை டாக்டர்எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப் போவதாகவும், ஹால் டிக்கெட் கொடுப்பது குறித்து மருத்துவப்பல்கலைக்கழகமே முடிவு செய்யும் என்றும் இப்போது ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதம் வாபஸ்:

இதற்கிடையே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த மருத்துவ மாணவர்கள் அதனைக் கைவிட்டனர். பலமாணவர்கள் மயங்கி விழுந்ததாலும் 10ம் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாலும் இந்த உண்ணாவிரதம்வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கடந்த 19 நாட்களாக மருத்துவ மாணவர்களின் போராட்டம் நடந்து வருகிறது.

இன்று மதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி நடத்தி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்கள்.

செம்மலை ஆலோசனை:

இதற்கிடையே மருத்துவர்களின் ஸ்டிரைக் குறித்து உயர் அதிகாரிகளுடன் நலத்துறை அமைச்சர் செம்மலை இன்று ஆலோசனைநடத்தினார். பேச்சுவார்த்தைக்கு அரசு இறங்கி வரும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X