இந்தியன் ஏர்லைன்சின் அனைத்து மகளிர் விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து மஸ்கட்டுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் திடீரென அனைத்து மகளிர் விமானத்தை இயக்கியது.
மே 11ம் தேதி சென்னையிலிருந்து, மஸ்கட்டிற்கு இயக்கப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்திற்குள் ஏறிஅமர்ந்த பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், விமானி முதல் ஊழியர்கள் வரை அத்தனைபேரும் பெண்களாக இருந்ததுதான்.
இந்த விமானத்தின் விமானிகளாக கேப்டன் ரச்சனா திங்க்ரா, கேப்டன் ரேனு பணியாற்றினர். இதுதவிர மற்ற 5ஊழியர்களும் பெண்களே. எதேச்சையாகவே இப்படி அனைவரும் பெண்களாக அமைந்து விட்டனர் என்றும்,வழக்கமாக இப்படி அமைவதில்லை என்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த அனைத்துமகளிர் விமானத்திற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்ததை மறுக்கமுடியாது!!












Click it and Unblock the Notifications