For Daily Alerts
Just In
இறந்தும் பயணிகளைக் காத்த டிரைவர்!
ஓசூர்:
தர்மபுரி மாவட்டம் ஓசூர் அருகே பஸ்ஸை ஓட்டிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்டிரைவர். ஆனால், தனது சமயோஜித புத்தியால் 60 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
ஓசூலிருந்து பெங்களூர் சென்ற அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்சை மஞ்சுநாத ராவ் என்ற டிரைவர் ஓட்டிச்சென்றார். பஸ் ஓசூரைத் தாண்டி அத்திப்பள்ளி என்ற இடத்தை அடைந்தபோது, டிரைவருக்கு மாரடைப்புஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மயங்கினார். ஆனால், அந்த நிலையிலும் சடர்ன் பிரேக்கைப் போட்டு பஸ்சை சாலையில்நிறுத்தி விட்டார் மஞ்சுநாத ராவ். அடுத்த நிமிடமே ஸ்டியரிங் மீது சரிந்து விழுந்து இறந்தார்.
தனது உயிர் போகும் நிலையிலும், பயணிகளின் உயிரைக் காத்த டிரைவர் மஞ்சுநாத ராவுக்கு பயணிகள்நன்றியுடன் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றனர். பின்னர் டிரைவன் உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.


