கல்குவாரி பிரச்சனை: அதிமுக பிரமுகர் நடுரோட்டில் வெட்டி கொலை
சென்னை:
சென்னை அதிமுக பிரமுகர் ஒருவர் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
தாம்பரம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினராக இருந்தவர் முத்து (வயது 45). இவர் இப்போது அதிமுக நகரச்செயலாளராக உள்ளார்.
தனது அரசியல் செல்வாக்கை வைத்து திருநீர்மலையில் குத்தகையே இல்லாமல் கல் குவாரி ஒன்றை வளைத்துப்போட்டிருந்தார். இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பில் அதிமுகவின் இன்னொரு கோஷ்டிக்கும் இவருக்கும் பிரச்சனைஇருந்து வந்தது.
இங்கிருந்து பல லட்சம் மதிப்புள்ள கற்களை வெட்டி விற்பனை செய்து வந்தார். இதனால் எதிர் அதிமுககோஷ்டிக்கும் முத்துவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து நடந்த பேச்சுவார்த்தைகளில் சமரசம்ஏற்படவில்லை. இருவரும் அவ்வப்போது மோதிக் கொள்வது வழக்கம்.
இந் நிலையில் இன்று காலை உடற்பயிற்சி செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் மைதானத்துக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது தாம்பரம் நெடுஞ்சாலையில் வைத்து அவரை வழிமறித்த சிலர் கண்டந்துண்டமாய்வெட்டி வீசினர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. மாவட்ட எஸ்.பி. சங்கர்சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
இச் சம்பவத்தைத் திசை திருப்பும் வகையில் போலீஸ் தரப்பில் இருந்து முதலில் பரப்பப்பட்ட செய்தியில், உள்ளூர்குவாரித் தொழிலாளர்களுக்கு வேலை தராததால் அவர்களுக்கும் முத்துவுக்கும் இடையே பிரச்சனைஇருந்ததாகவும் அதன் காரணமாகவே இவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மேற்கொண்டு நாம் நடத்திய விசாரணையில் தான் இவர் சட்ட விரோதமாக குவாரியை வளைத்துப் போட்டுகற்களை வெட்டி விற்று வந்ததும் இதில் இவருக்கும் எதிர் அதிமுக கோஷ்டிக்கு புகைச்சல் இருந்ததும்தெரியவந்தது. எதிர் அதிமுக கோஷ்டியினர் கைது செய்யப்படுவார்களா அல்லது அரசியல் செல்வாக்கால்தப்பிவிடுவார்களா என்று தெரியவில்லை.
கொல்லப்பட்ட முத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்.


