For Quick Alerts
For Daily Alerts
Just In
தா.கி. இறுதிச் சடங்கில் ஜெயா டிவி நிருபர் மீது தாக்குதல்
மானாமதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணனின் இறுதிச் சடங்கின்போது, ஜெயா டிவி நிருபர் ராஜேஷ்கண்ணன் மீது தாக்குதல் நடந்தது.
தா.கிருட்டிணனின் உடல் தகனம் அவரது சொந்த ஊரான கொம்புக்கரனேந்தலுக்கு அருகே உள்ளமுத்தனேந்தலில் நடந்தது. இதைப் படம் பிடிக்க வந்த ஜெயா டிவி குழுவினர் மீது சில திமுகவினர்தாக்குதல் நடத்தினர்.
இதில் நிருபர் ராஜேஷ் கண்ணனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
திமுக குறித்தும், தா.கி படுகொலையில் திமுகவையே குறிவைத்து செய்திகள் வெளியிடுவதாலும்ஆத்திரமடைந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக இதுவரை யாரும்கைது செய்யப்படவில்லை.


