சென்னையில் பறக்கும் ரயில் தடம் புரண்டது
சென்னை:
சென்னை பறக்கும் ரயில் தடம் புரண்டது. ஆனால், பயணிகள் காயம் ஏதுமின்றி தப்பிவிட்டனர்.
சென்னை கடற்கரையிலிருந்து மயிலாப்பூர் வரை பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மாடி ரயில் என்றும்இதை சென்னைவாசிகள் அழைக்கிறார்கள். நேற்று வழக்கம் போல ஒரு ரயில், மாலை 3.40 மணிக்கு கடற்கரைரயில் நிலையத்திலிருந்து மயிலாப்பூர் கிளம்பியது.
கோட்டை ரயில் நிலையத்தை அடைவதற்கு 200 மீட்டர் தொலைவில் ரயில் வந்தபோது, ரயில் அதிர்ச்சியில்குலுங்கியது.
இதையடுத்து ரயில் டிரைவர் பிரபாகரன், அவசர பிரேக்கை பயன்படுத்தி, உடனடியாக ரயிலை நிறுத்தினார்.உடனடியாக கீழே இறங்கிப் பார்த்தபோது, தண்டவாளத்தில் ஒரு இடத்தில் பெரிய இரும்புத் தகடுகள் இருந்ததுதெரிய வந்தது.
இது திட்டமிட்ட சதியா அல்லது சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக வைத்து விட்டுச் சென்றனரா என்றுதெரியவில்லை.
இரும்புத்தகடு இருந்த காரணத்தால் ரயிலின் 2-வது மற்றும் 3-வது பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டுஇறங்கி விட்டன. இருப்பினும், ரயில் மெதுவான வேகத்திலேயே சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பறக்கும் ரயில் இயக்கப்பட்ட ஆரம்பித்த காலம் முதல் இதுவரை விபத்தே நடந்ததில்லை, இதுவே முதல் விபத்துஎன்பது குறிப்பிடத்தக்கது. தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் ஜெயந்த் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்துவந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications