தா.கி. கொலை வழக்கு: 9 திமுகவினருக்கு நிபந்தனை ஜாமீன்
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 திமுகவினருக்கு நிபந்தனைஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக ஏராளமான திமுகவினர் விசாரணைக்காக தொடர்ந்துஅழைத்துச் செல்லப்பட்ட வண்ணம் உள்ளனர். இவர்களில் பலரை கைது செய்து உள்ளேயும் தள்ளிவருகின்றனர் போலீசார்.
இரு நாட்களுக்கு முன்பு 9 திமுகவினரை மதுரை ஆண்டாள்புரம் போலீஸார் கைது செய்தனர்.பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந் நிலையில் இந்த 9 பேருர்கும் மதுரை 4-வது மாஜிஸ்திரேட் பாலசுப்ரமணி நிபந்தனையுடன்கூடிய ஜாமீன் அளித்துள்ளார்.
அதன்படி, கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாண்டியன், வி.கே.குருசாமி, ஜெயராமன், மாணிக்கம்,உதயகுமார், ராஜ், நாகேஷ், சரவணன், ராஜேந்திரன் ஆகிய 9 பேரும் தினசரி காலை 10 மணிக்குஆண்டாள்புரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
ஏற்கனவே திருப்பதூர் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. சிவராமனுக்கும் ஜாமீன் தரப்பட்டுவிட்டது.ஆனால், அழகிரிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டது.
அழகிரியை சந்தித்தார் மு.க.தமிழரசு:
இதற்கிடையே திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியை, அவரது சகோதரர்மு.க.தமிழரசு சந்தித்துப் பேசினார்.
அழகிரியை அவரது மனைவி காந்திமதி மகன் தயாநிதியும் சந்தித்தனர்.
ஆனால், அழகிரியைப் பார்க்க வந்த முன்னாள் அமைச்சர் நேரு, அன்பில் பெரியசாமி உள்ளிட்டஎம்.எல்.ஏக்களை உள்ளே அனுமதிக்க சிறை அதிகாரிகள் மீண்டும் மறுத்து விட்டனர்.
உறவினர்கள் மட்டுமே அழகிரியைப் பார்க்கலாம் என்று சிறை நிர்வாகிகள் காரணம் கூறியுள்ளனர்.


