For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இசையே வாழ்க.. நீடுழி வாழ்க...

By Staff
Google Oneindia Tamil News

திருக்கடையூர் (தஞ்சாவூர்):

Ilayarajaஇசைஞானி இளையராஜாவின் மணி விழா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்பட்டது.

இசைஞானிக்கு 60 வயது முடிந்து 61வது வயது பிறந்துள்ளது. மேலும் அவரது திருமண நாளும் நேற்று முன் தினம்கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து குடும்பத்துடன் திருக்கடையூர் சென்ற இளையராஜா அங்கு தனது மணிவிழாவைக் கொண்டாடினர்.

கோவில் தலைமை குருக்குள் எடுத்துக் கொடுத்த தாலியை, தனது மனைவியின் கழுத்தில் கட்டினார். இந்தநிகழ்ச்சியில் இளையராஜாவின் புதல்வர்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, மகள் பவதாரணி உள்படஅவரது உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் தவிர இயக்குனர் பாரதிராஜா, இளையராஜாவுக்கு முதன்முதலில் சினிமா சான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்பஞ்சு அருணாச்சலம், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட திரையுலக முக்கியஸ்தர்களும்கலந்துகொண்டனர்.

-6 லிருந்து 60 வரை:

தமிழ்த் திரையுலகின் முடி சூடா மன்னரான இசைஞானி, தேனி மாவட்டம் கொடைக்கானல் மலையை ஒட்டியபண்ணைப்புரம் என்று குக்கிராமத்தில் 1943ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி பிறந்தவர். ராசய்யா தான்இயற்பெயர். இவரது தந்தை ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். மிக ஏழ்மையான தலித் இனக் குடும்பம்.

இளையராஜாவுக்கு நான்கு சகோதரர்கள். மூத்தவர் பாவலர் வரதராஜன் புரட்சிப் பாடகராக இருந்தவர். கம்யூனிஸசித்தாந்தத்தில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவர். பாட்டுக்கள் எழுதி அதை பட்டி தொட்டிகளில் சென்றுபாடுவார்.

சின்ன வயதிலேயே இளையராஜாவுக்கு பாட்டுக்களுக்கு இசையமைப்பதில் தனியாத தாகம். தனது அண்ணன்பாவலர் வரதராஜன் எழுதிய பாட்டுக்களுக்கு இசையமைத்துக் காட்டுவார்.

பின்னாளில் அண்ணன் வரதராஜன், தான் சென்ற இடங்களுக்கு தனது தம்பிகள் ஆர்.டி.பாஸ்கர், இளையராஜா,கங்கை அமரன் ஆகியோரையும் கூட்டிச் செல்ல ஆரம்பித்தார்.

வரதராஜன் பாட்டுப் பாடுவார், இளையராஜா இசையமைப்பார், கங்கை அமரனும், பாஸ்கரும் வேறு பணிகளைப்பார்ப்பார்கள். இந்த சகோதரக் கூட்டணி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கம்யூனிஸச் கூட்டங்களில்இந்த நால்வர் அணிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

கம்யூனிஸத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் கூட பாட்டு கேட்க கம்யூனிஸ்ட் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தனர்.அந்த அளவுக்கு பாப்புலர் ஆயினர் இந்த பண்ணைப்புரம் சகோதரர்கள்.

Ilayarajaபின்னாளில் இளையராஜா தனது சகோதரர்கள் பாஸ்கர் மற்றும் கங்கை அமரனுடன் சென்னைக்கு கிளம்பினார்.தனது இசைப் பயணத்தை அங்கேதான் தொடர முடியும் என்ற நம்பிக்கையில் சென்னை வந்த ராஜாவுக்கு கடும்சவால்கள்தான் காத்திருந்தன.

பெரிய இசையமைப்பாளராக வேண்டும் என்று விரும்பிய அவர் ஜி.கே.வெங்கடேஷிடம் சிஷ்யனாக சேர்ந்தார்.லட்சிய வெறியுடன் இருந்த அவர் விரைவாக கற்றுக் கொண்டார். குரு மெச்சிய சிஷ்யனாகத் திகழ்ந்தார்.

ஆனால் தனி ஆவர்த்தனம் செய்ய வேண்டும் என்றால் நல்ல திறமை இருக்க வேண்டும் என்று நினைத்ததால்,வெங்கடேஷ் தவிர வேறு சில இசையமைப்பாளர்களிடமும் தொழில் கற்றுக் கொண்டார்.

இறுதியில் தனித்து செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் வந்தது. பலரிடம் வாய்ப்புக் கேட்டார். அப்போதுஎம்.எஸ்.விஸ்வநாதன் கொடி கட்டிப் பறந்த காலம். தம்பி, கிராமத்து மியூசிக் எல்லாம் எடுபடாது என்று சொல்லிஇவரை விரட்டி விட்ட தயாரிப்பாளர்கள் தான் அதிகம்.

ஆனால், கடும் போராட்டத்துக் பின் 1976ம் ஆண்டில் தயாப்பாளர் பஞ்சு அருணாச்சலம் தனது அன்னக்கிளிபடத்தில் இசையமைக்க இளையராஜாவுக்கு வாய்ப்புத் தந்தார். ரெக்கார்டிங்குக்காக எல்லேரும் உட்கார்ந்திருக்கஇளையராஜா தனது ஆர்மோனியத்தை வாசிக்க ஆரம்பிக்க கரண்ட்-கட்.

சென்டிமெண்ட்கள் நிறைந்த தமிழ் சினிமாவில் இந்த சகுனத்தால் இளையராஜா மனம் நொறுங்கி கண் கலங்க,அதைப் பார்த்த பஞ்சு அருணாச்சலம், தம்பி, இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. உன் மியூசிக் மேலேஎனக்கு நம்பிக்கை இருக்கு. நீ சாதிப்பே என்று கூற அவரது கையைப் பற்றிக் கொண்டார் இளையராஜா.

Ilayarajaகரண்ட் வந்தது, அன்னக்கிளி உன்னைத் தேடுது... பாட்டும் வந்தது. அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.பட்டிதொட்டியெல்லாம் இசைஞானியின் புதிய இசையில் நனைந்தது. யாருப்பா இது இளையராஜா என்றுதமிழகம் திரும்பிப் பார்த்தது.

கிட்டத்தட்ட 25 வருடங்களாய் தமிழர்களுடன் பிரிக்க முடியாமல் கலந்து விட்டது இளையராஜாவின் இசை.தமிழகத்தின் அடையாளங்களில் ஒருவர் இளையராஜா. தமிழ் கலாச்சாரத்தின் அடையாளத்தில் ஒன்றாகிவிட்டதுஅவரது இசை.

அன்னக்கிளியில் ஆரம்பித்த இளையராஜாவின் இசைப் பயணம் வெற்றிகரமாக தொடர்ந்தது. அதுவரை இந்திடியூன்களை உல்டா பண்ணிப் போட்டு வந்த இசையமைப்பாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.தமிழர்களுக்கோ இன்ப அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இளையராஜாவின் இசையுடன் வந்த அடுத்தடுத்த படங்கள்கோல்டன் ஜூப்ளியைக் கொண்டாடின.

கிராமத்து இசை, கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசை ஆகியவற்றைக் கலந்து புதிய இசை தந்தார் ராஜா.சினிமாவில் பிஸி ஆனாலும் கற்கும் ஆர்வத்தை விடவில்லை ராஜா. கிட்டார் வாசிப்பை சரி செய்து கொள்ளலண்டன் சென்று பட்டம் பெற்று வந்தார்.

இது தான் இசை என்று புது வேதாந்தத்தையே படைத்தார் இளையராஜா.

அத்துடன் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அட்டாகாசமான டைரக்ஷனும் கவியரசு வைரமுத்துவின் வைரவரிகளும் சேர்ந்து கொள்ள இளையராஜாவின் பாடல்கள் தமிழர்களுக்கு பொழுதுபோக்காக அல்ல, கட்டாயமாகமாறின.

நிழல்கள், ராஜபார்வை, மூன்றாம் பிறை, ஆறிலிருந்து அறுபது வரை தொடங்கி சிந்து பைரவி, பத்திரகாளி, முதல்மரியாதை என வளர்ந்து, புன்னகை மன்னன், அஞ்சலி, தளபதி, நாயகன் என வலுப்பெற்று இன்றும் ஹே ராம்,பாரதி, சேது, சொல்ல மறந்த கதை என இளையராஜாவின் இசைப் புயல் ஓய்வின்றி சுழன்றடித்துக் கொண்டுள்ளது.

Ilayarajaமுன்பு போல இல்லாமல் ஏராளமான இசையமைப்பாளர்கள் வந்து விட்ட இந்த நாளிலும் கூட சேது படத்தில்ரீ-ரெக்கார்டிங்கில் இளையராஜா போட்ட இசை படம் பார்த்தவர்களை கண் கலங்க வைத்தது. மனம் பதை பதைக்கவைத்தது. எங்கே செல்லும் இந்தப் பாதை... என்று அவர் பாடியபோது நம் கண்கள் குளமானது.

அழகியில் அவரது உன் குத்தமா, என் குத்தமா பாட்டு பார்த்திபனுக்கும், நந்திதா தாஸுக்கும் மட்டுமல்லாதுகேட்டவர்கள் அத்தனை பேரின் மனசுக்குள் பிரளயத்தை ஏற்படுத்தின.

தமிழ் சினிமாவின் இசை வடிவத்தையே மாற்றிப் போட்டவர் நம் ராசா. அவர் இன்னும் பல்லாண்டுகள் நீடுழிவாழ்ந்து தமிழர்களின் மனங்களை தொடர்ந்து மகிழ்விக்க வேண்டும்.

அந்த இசை மகானுக்கு நம் இனி பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X