ஸ்ரீதேவியின் 8 மாடி கட்டடம்: இடிக்கும் பணி தொடர்கிறது
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீதேவிக்குச் சொந்தமான 8 மாடிக் கட்டடத்தின் மேல் 3 மாடிகளை இடிகும் பணிநடந்து வருகிறது. இந்த இடிப்புப் பணி நேற்ற மாலையில் ஆரம்பித்தது.
10 நாட்களில் 3 மாடிகளும் இடிக்கப்பட்டுவிடும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனி பிஷப் வாலர்ஸ் அவினியூ நடிகை ஸ்ரீதேவியும், சாந்தி பில்டர்ஸ்என்ற மார்வாடிகளின் நிறுவனம் சேர்ந்து ஜாயிண்ட் வென்சர் முறையில் இந்த எட்டு மாடி பிளாட்டுகளைக்கட்டியுள்ளனர்.
நான்கு மாடிகள் மட்டுமே கட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அளித்திருந்தது. ஆனால் விதிமுறைகளைமீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மேலும் 4 மாடிகளை கட்டினர். அவற்றை விற்றும்விட்டனர்.
இந் நிலையில்சில நாட்களுக்கு முன் கட்டடத்தின் கீழ் பகுதியில் இருந்த ஒரு தூண் பாரம் தாங்காமல் இடிந்துவிழுந்தது. இதனால் கட்டடமே ஆடியது. அக்கம் பக்கத்துக்கு வீடுகளும் சேர்ந்து ஆடின.
இதனால் அப்பகுதியில் வசித்த்து வருபவர்களிடையே பீதி கிளம்பியது. கட்டடம் எப்போது வேண்டுமானாலும்இடிந்து விழும் அபாயம் இருப்பதாக மக்கள் பயத்தில் ஆழ்ந்தனர். இதனால் அருகில் உள்ள வீடுகளும்சேதமடைந்து உயிர்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 3 மாடிகளை இடித்துத் தள்ளி விடுமாறு மாநகராட்சி ஆணையர்விஜயக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
பிற்பகல் 12 மணிக்குள் இடிக்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தும் சாந்தி பில்டர்ஸ் நிறுவனமும் ஸ்ரீதேவியும்அதைக் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மாலை 4 மணி வாக்கில் மாநகராட்சி ஊழியர்கள் கட்டடத்தின் 3மாடிகளை இடிக்கும்பணியைத் தொடங்கினர்.
30க்கும் மேற்பட்ட ஊழியர்கள், போலீஸான் பாதுகாப்புடன் மேல் 3 மாடிகளை இடிக்கத் தொடங்கினர். இந்தப்பணி மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. இன்று காலை மீண்டும் இடிப்புப் பணி தொடங்கியது.
இந்தப் பணி 10 நாட்கள் முதல் 2 வாரங்கள் வரை நீடிக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3மாடிகளை இடிப்பதால் அருகாமையில் உள்ள கட்டடங்கள், கீழே உள்ள 4 மாடிகளுக்கு எந்தவித பாதிப்பும்நேராமல் பார்த்துக் கொள்ளும் பொருட்டு, நிபுணர்களின் ஆலோசனைப்படி படிப்படியாக இடிப்புப் பணிநடைபெறுவதாக அதிகாரி ஒருவர் தெவித்தார்.
இதனால் தான் 2 வாரங்கள் வரை இந்தப் பணி நீடிக்கும் என்றார்.
இடிக்கும் பணி நடக்கும்போது பிஷப் வாலர்ஸ் அவென்யூ பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இடிக்கும் பணிக்காக ஆகும் செலவை, சாந்தி பில்டர்ஸ் நிறுவனமும் ஸ்ரீதேவியும் தான்வழங்க வேண்டும் என்றும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
ஆனால், 3 மாடிகளை இடிக்கும் விவகாரத்தில் மாநகராட்சி அவசரப்பட்டு விட்டது என்று சாந்தி பில்டர்ஸ்பார்ட்னர் கெளதம் கூறினார்.


