நான் "திவால்" அல்ல: அதிமுக எம்.எல்.ஏ. வாசுதேன் கூறுகிறார்
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தால் திவால் (பொருளாதாரரீதியில் முழுமையாக நசிவடைந்தவர்) ஆனவராகஅறிவிக்கப்பட்ட மதுராந்தகம் அதிக எம்.எல்.ஏ. வாசுதேவன், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக கூறியுள்ளார்.
திவால் ஆனவராக அறிவிக்கப்பட்டதால் எம்.எல்.ஏ. பதவி பறிபோய் இடைத் தேர்தல் வரும் சூழல்உருவாகியுள்ளது.
வெங்கட்ரமணி என்பவரின் கடையில் ரூ. 68,000க்கு டிவி, பிரிட்ஜ் போன்ற பொருள்களை வாங்கிவிட்டு காசுகொடுக்காமல் இழுத்தடித்து வந்தார் வாசுதேவன். இதையடுத்து வாசுதேவனை திவால் ஆனவராக அறிவிக்குமாறுஅறிவிக்கக் கோரி வழக்குப் போட்டார் வெங்கட்ரமணி.
இதைத் தொடர்ந்து அவர் திவால் ஆனவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் நிருபர்களிடம் வெங்கட்ரமணி கூறியதாவது: நீதிமன்ற உத்தரவு எனக்கு வரவில்லை. உத்தரவு நகல்கிடைத்தவுடன், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலேயே அப்பீல் செய்வேன்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) மூலம்தான், கடந்த 1998ம் ஆண்டு நான் எலெக்ட்ரானிக்பொருட்களை கடனுக்கு வாங்கினேன். இதற்கான பணம் காசோலை மூலமாக டீலருக்கு வழங்கப்பட்டு விட்டது.
எனக்கும், பொருட்களை விற்ற வெங்கடரமணிக்கும் நேரடியான தொடர்பு கிடையாது. நான் ரூ. 68,805 ரூபாய்கட்ட வேண்டும் என்று அவர் நோட்டீஸ் அனுப்பியபோது நான் கட்ட மறுத்துவிட்டேன் என்றார் அவர்.
இதற்கிடையே, வாசுதேவனின் பதவி குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை குறிப்பிட்டு யாராவதுஒருவர் ஆளுநரிடம் மனு கொடுத்தால் உடனடியாக அவரது பதவி பறிபோய் விடும் நிலை உள்ளது.
அதேசமயம், அவருக்கு அப்பீல் செய்யவோ அல்லது பணத்தைத் திருப்பிக் கட்டவோ அவகாசம்கொடுக்கப்படவும் வாய்ப்புள்ளது.


