அழகிரிக்கும் கட்சிப் பதவி தரப்படலாம்: கருணாநிதி
சென்னை:
திமுக தலைவராக கருணாநிதி இன்று 9-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகுசெய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அழகிரிக்கு, ஸ்டாலினுக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கிடையேநிலவி வந்த முரண்பாடுகள் களையப்பட்டு விட்டன.
ஆனால் அவர்களுக்கிடையே பிரச்சினை இருப்பது போலவும், தா.கி.படுகொலையை இதற்குப்பயன்படுத்திக் கொண்டு திமுகவை அழிக்கவும் தமிழக அரசு நினைக்கிறது. அதற்காககாவல்துறையை பயன்படுத்தி வருகிறது.
தா.கி விவகாரம் தொடர்பாக அழகிரி எனக்கு எழுதியாக 2 கடிதங்களை போலீசார்வெளியிட்டுள்ளனர். ஆனால், 3வது கடிதத்தை மட்டும் காட்டாமல் மறைத்துவிட்டனர்.
சிவகங்கையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக அழகிரி எனக்குக் கடிதம்எழுதினார். அந்தக் கடிதத்தை நான் ஸ்டாலினிடம் தந்தேன். அவர் தா.கிருட்டிணனுடன் பேசினார். இதையடுத்துதா.கி எனக்குக் கடிதம் எழுதினார். அதை நான் அழகிரிக்குத் தெரிவித்தேன்.
அதையடுத்து அழகிரி எனக்கு எழுதிய கடித்தை போலீசார் காட்டாமல் மறைத்துவிட்டனர். 5.5.03 அன்று அழகிரிஎனக்கு எழுதிய கடிதத்தில் தா.கி. மீது குற்றம் சுமத்துவதற்காக முந்தைய கடிதங்களை நான் எழுதவில்லை. கட்சிக்குநற்பெயர் வேண்டும் என்று தான் எழுதினேன் என்று கூறியிருந்தார் (கடிதத்தையும் நிருபர்களிடம் காட்டினார்கருணாநிதி).
ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே இருந்த பிரச்சனை தீர்ந்துவிட்டது. அவர்களுக்குள் சொத்துத் தகராறுஇல்லை.கட்சி நடத்துவதில் உள்ள அபிப்ராய பேதம் தான். அழகிரிக்கு கட்சிப் பதவி கூட தரப்படலாம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக எதிர்காலத்தில் நீடிக்குமா, இல்லையா என்பது குறித்துஇப்போதே ஏதும் கூற முடியாது. தமிழகத்தில் பா.ஜ.கவுக்கும் எங்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும்இல்லை.
பொடா சட்டத்தை நாங்கள் குறை கூறவில்லை. ஆனால் அதுதவறாகப் பயன்படுத்தப்பட்டுவருவதால் அதை வாபஸ் பெறுமாறு கோருகிறோம். அந்த சட்டம் தேவையானதுதான், ஆனால்சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் திசை மாறிப் போய் விட்டதால் அது தேவையில்லை என்றுநினைக்கிறோம்.
இந்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வைகோ போட்டுள்ள வழக்கின் தீர்ப்புக்காககாத்திருக்கிறோம். தீர்ப்பு வந்த பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.
திமுகவுக்கு இந்த ஆட்சி நிறைய இன்னல்களைக் கொடுக்கிறது. இதற்கு மீடியாவும் (பத்திரிக்கைள்)ஓரளவு ஆதரவாக இருக்கின்றன. எனவே ஒவ்வொரு திமுக அமைப்பும், பத்திரிக்கைகள் போலசெயல்பட்டு மக்களிடையே பிரசாரம் செய்ய வேண்டும் என்றார் கருணாநிதி.
நிருபர்:ஸ்டாலினை அடுத்த வாரிசாக மறைமுகமாக அறிவிக்கவே துரைமுருகன் போன்றமூத்தவர்களை ஒதுக்கிவிட்டு அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளதா?
கருணாநிதி: இதற்கு வாரிசு என்று நீங்கள் பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளுங்கள்.
அன்பழகன் (தலையிட்டு..): பெரியாருக்கு அண்ணா வாரிசாக விளங்கினார். அண்ணாவுக்கு கலைஞர்வாரிசாக இருந்தார். இயக்கத்தின் வளர்ச்சியில் ஸ்டாலினுக்கு தனி இடம் இருக்கிறது. கலைஞருக்கு அடுத்தபடியாகமக்களிடம் தொடர்பு கொண்டவராக இருக்கிறார். இதனால் தான் அவருக்குப் பதவி தரப்பட்டது. தனிப்பட்ட உறவுகாரணமாக அல்ல.
தா.கி.படுகொலைக்கு கண்டனம்:
முன்னதாக இன்று நடந்த திமுக பொதுக் குழுவில் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவற்றின் விவரம்:
- முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கு பொதுக்குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளைப் பிடிப்பதற்குப் பதிலாக திமுகவினரையே கைது செய்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
- பொடா சட்டம் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தவறுதலாகப் பயன்படுத்தப்படுவதால் அந்த சட்டத்தை முழுவதுமாக வாபஸ் பெற வேண்டும்.
- விவசாயிகளின் நலனை அழிக்கும் விதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இலவச மின்சாரத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
- கூட்டுறவு நூற்பாலைகளை தனியாரிடம் விடும் முடிவை அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. சட்டம் ஒழுங்கை ஒழுங்ாகக பராமரிக்க வேண்டும்.
- ஆட்சியாளர்களின் கைப்பாவையாக, ஏவல்துறையாக இல்லாமல் மக்களின் நண்பனாக காவல்துறை செயல்பட வேண்டும்.
- தமிழை செம்மொழியாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டும்.
- மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ் பாடத்தை ரத்து செய்யக் கூடாது.
- உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்.
- விஷம் போல உயர்ந்து வரும் விலைவாசியைக் குறைக்க நடவடிககை எடுக்க வேண்டும்.
- பள்ளிக் கூட பாட நூல்களின் விலையைக் குறைக்க வேண்டும்.
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய அரசு முயற்சிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


