For Daily Alerts
Just In
காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
டெல்லி:
வரும் 6ம் தேதி டெல்லியில் நடப்பதாக இருந்த காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் திடீரென ரத்துசெய்யப்பட்டு 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வறட்சி காலத்தில் காவிரி நீரை தமிழகமும், கர்நாடகம் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பாக புதியபார்முலாவை உருவாக்குவது குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இக் கூட்டத்தில் தமிழக, கர்நாடக,கேரள, பாண்டிச்சேரி தலைமைச் செயலாளர்கள், நீர்வளத்துறை செயலாளர்கள், வேளாண்துறை செயலாளர்கள்,பொதுப் பணித்துறை செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
6ம் தேதி இமாச்சல் பிரதேச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் ஒரு வழக்கில் ஆஜராக வேண்டி இருப்பதால்கோஸ்வாமியால் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து கூட்டம் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


