For Daily Alerts
Just In
கருணாநிதிக்கு இன்று பிறந்த நாள்: 81வது வயதில் நுழைகிறார்
சென்னை:
திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று 81வது வயதில் அடி எடுத்து வைக்கிறார்.
தா.கிருட்டிணன் படுகொலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தனது பிறந்த நாளைகொண்டாடப் போவதில்லை என்று கருணாநிதி அறிவித்துவிட்டார். கடந்த ஆண்டு காவிரிவறண்டதால், விவசாயிகள் உணவின்றித் தவித்தனர். இதனால் தனது பிறந்த நாளை அவர்கொண்டாட மறுத்துவிட்டார்.
இந்த ஆண்டு கருணாநதி பிறந்த நாளைக் கொணடாடாவிட்டாலும் அவருக்கு பல கட்சிகளின்தலைவர்களும் திமுகவினரும் நேரிலும், தொலைபேசியிலும், தந்திகள் மூலமும் வாழ்த்துத்தெரிவித்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி ஆகியோர் அவரை நேரில் சந்துத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
தமிழுக்காக உழைத்த, மூத்த தலைவர்களின் ஒருவரான அவருக்கு நாமும் வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொள்கிறோம்.


