For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டென்சன் அண்ணாவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Paanduranganஆளுநர் மாளிகையில் 5 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில் சில சுவாரஸ்யங்கள் நடந்தன.அவற்றில் சில:

* பதவியேற்க வந்த தளவாய் சுந்தரத்தின் காரைக் கூட கவர்னர் மாளிகை பாதுகாவலர்கள் உள்ளேஅனுமதிக்கவில்லை. இதனால் அவருக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

* அமைச்சராக பதவி ஏற்ற அண்ணாவி, கவர்னர் உறுதி மொழியை படிப்பதற்கு முன்னதாவேஅவசரப்பட்டு வாசிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்து கவர்னரும் முதல்வர் ஜெயலலிதாவும் சிரிக்க,தவறை உணர்ந்து கொண்டு நிறுத்தினார் அண்ணாவி. பதவி ஏற்ற பின்னும் அண்ணாவியின் பதட்டம்தணியவில்லை. உறுதி மொழி எடுத்தவுடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பணிவுடன் வணங்கிதன் இருக்கைக்குச் செல்ல முயன்றார்.

பின்னர் ஜெயலலிதாவே அவரை அழைத்து கையெழுத்துப் போட்டு விட்டுச் செல்லும்படிஅண்ணாவியிடம் கூறினார்.

* இன்பத்தமிழனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த கவர்னர் ராம்மோகன் ராவ், "ரா.தா.இன்பத்தமிழனாகிய நான்.... " என்று தொடங்கினார். ஆனால், இன்பத்தமிழன் தன் தந்தைதாமரைக்கனியின் இனிஷியலைத் தவிர்த்துவிட்டு இன்பத்தமிழனாகிய நான் என்று மட்டும் சொல்லிபதவி ஏற்பு உறுதிமொழி மற்றும் ரகசிய காப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

* பதவி பறிக்கப்பட்ட பாபா சுந்தரம், வடிவேலு, பாலசுப்பிரமணியம் ஆகிய மூவரும் இந்த நிகழ்ச்சிக்குவரவில்லை.

* வழக்கமாக பதவியேற்பு விழாக்களுக்கு வரும் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் யாரும்வரவில்லை.

* தளவாய் சுந்தரத்துடன் சேர்த்து முன்பு பதவி பறிக்கப்பட்ட தம்பிதுரை மீண்டும் தனக்கு பதவிகிடைக்காததால் முகம் தொங்கிப் போய் உட்கார்ந்திருந்தார். விழா முடிந்தவுடன் முதல் ஆளாகவெளியேறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X