மாற்றுப் பயிருக்கு மாறுங்கள்: காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஜெ. கோரிக்கை
சென்னை:
காவிரி டெல்டாப் பகுதிக்கு இந்த ஆண்டும் உரிய நேரத்தில் காவிரி நீர் வர வாய்ப்பில்லைஎன்பதால் நெல்லை விட்டுவிட்டு மாற்றுப் பயிர்களை பயிரிட விவசாயிகள் தயாராக வேண்டும்என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால், இந்த ஆண்டு குறுவைப் பயிருக்கும் காவிரிநீர் உரிய நேரத்தில் வருமா என்பதில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது.
மேலும், மேட்டூர் அணையில் மிகவும் குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளது. இது காவிரிப்பாசனத்திற்குப் போதாது. எனவே திட்டமிட்டபடி ஜூன் 12ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கஇயலாத நிலை உள்ளது.
காவிரி டெல்டாப் பகுதியின் ஒரு பகுதியில் கிணற்றுப் பாசன வசதி உள்ளது. அந்தப் பகுதிவிவசாயிகள் குறுகிய கால நெல் பயிரிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இதனால் 105 நாட்களில் பயிரை அறுவடை செய்துவிட முடியும்.
முற்றிலும் தண்ணீர் வசதியே இல்லாத பகுதிகளில் நீர் அதிகம் தேவைப்படாத மாற்றுப் பயிர்களானநிலக்கடலை, உளுந்து, பச்சைப் பயறு, மொச்சை ஆகியவை பயிரிடுமாறு விவசாயிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவற்றிற்குத் தேவையான பயறு விதைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் கூறியுள்ள சிறப்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திஇவற்றைப் பயிரிட விவசாயிகள் முன் வர வேண்டும்.
காவிரி டெல்டாப் பகுதிகளில் ஏற்கனவே 6,000 தண்ணீர்க் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.பருவ மழை பெய்யும்போது இந்த குட்டைகளில் நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு விவசாயப்பணிகளில் ஈடுபட முடியும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.