For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குறள் ஒப்புவிக்கும் குட்டிக்கு ஜெ. ரூ. 5 லட்சம் பரிசு

By Super
Google Oneindia Tamil News
Jayalalithaa&Atchayaa
முதல்வர் ஜெயலலிதாவிடம் குறள் ஒப்புவித்த அட்சயா

சென்னை:
400 திருக்குறள்களை அட்சரம் பிசகாமல் ஒப்புவிக்கும் 3 வயதே நிரம்பிய அட்சயா என்ற சிறுமிக்குமுதல்வர் ஜெயலலிதா ரூ. 5 லட்சம் பரிசளித்தார்.

கடலூர் மாவட்டம் சுந்தரவாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்செயன். இவரது மகள் அட்சயா.இவளுக்கு 3 வயதுதான் ஆகிறது. ஆனால் 400 திருக்குறள்களை அட்சரம் பிசகாமல் அப்படியேஒப்புவிக்கிறாள் இந்தக் குட்டி.

தனது மகளின் திறமையை மேலும் வளர்த்து, அவளை நன்கு படிக்க வைக்க நினைத்த தந்தைதனஞ்செயனுக்கு அந்த வசதி இல்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவருக்கு பொருளாதாரவசதி இல்லாததால் தனது மகளின் கல்விக்கும் எதிர்காலத்துக்கும் உதவக் கோரி முதல்வர்ஜெயலலிதாவுக்கு மனு அனுப்பியிருந்தார்.

அந்த மனுவை பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா கூலி வேலை செய்து, குடியிருக்க நிரந்தர வீடு கூடஇல்லாத நிலையிலும், தனது மகளின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்த அக்கறையோடுஇருக்கும் தனஞ்செயனைப் பாராட்டியதோடு, அட்சயாவின் கல்விக்காக ரூ. 5 லட்சம் நிதியளிக்கஉத்தரவிட்டார்.

இதையடுத்து அட்சயாவுடன், தனஞ்செயன் தம்பதி சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். முதல்வர்ஜெயலலிதாவை சந்தித்து அட்சயா தனது திறமையை அவரிடமும் காட்டினாள்.

Jayalalithaa&Atchayaa
முதல்வரிடம் இருந்து ரூ. 5 லட்சத்துக்கான காசோலையைப் பெறும் அட்சயா

திருக்குறள்களை மிக அழகாக ஒப்புவித்த அட்சயாவை கண்கொட்டாமல் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் ஜெயலலிதா.

பின்னர் அவளைப் பாராட்டி ரூ. 5 லட்சம் நிதிக்கான காசோலையையும் தனஞ்செயனிடம்வழங்கினார்.

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இந்தத் தொகை பிக்ஸட் டெபாசிட்டில் வைக்கப்பட்டுஅதிலிருந்து கிடைக்கும் வட்டி அட்சயாவின் கல்விக்கு பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்எனவும் ஜெயலலிதா உத்தரவிட்டார்.


--> Mail this to a friend  Post your feedback  Print this page 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X