For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவல்துறை அதிகாரிகள் மீண்டும் மாற்றம்: டம்மி பதவியில் திலகவதி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Thilagavathy I P Sகூடுதல் டிஜிபி திலகவதி மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் காவல் நிலையங்களுக்கான கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த அவர் தற்போது கடலோர பாதுகாப்புக்கானகூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல முக்கிய காவல்துறை அதிகாரிகளும் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.

கடலோர பாதுகாப்புக்கான கூடுதல் டிஜிபி ராமலிங்கம், பொருளாதாரத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதே போல சென்னை காவல்துறையில் இருந்த 6 அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பூக்கடை காவல் நிலைய துணை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் சென்னை தெற்கு போக்குவரத்துதுணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். அண்ணா நகர் துணை கமிஷனர் சேஷசாயி பூக்கடை துணை கமிஷனராகமாற்றப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனர் கருணாசாகர், அண்ணாநகர் துணை கமிஷனராகமாற்றப்பட்டுள்ளார். கிண்டி துணை கமிஷனராக இருந்து வந்த சண்முகராஜேஸ்வரன், அசோக் நகருக்குமாற்றப்பட்டுள்ளார்.

அசோக் நகர் துணை கமிஷனர் சமுத்திரப் பாண்டி, புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.புளியந்தோப்பு துணை கமிஷனர் முருகன், கிண்டிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருவல்லிக்கேணி துணை கமிஷனராக இருந்த கிறிஸ்டோபர் நெல்சன் (கருணாநிதி கைது சம்பவத்தின்போதுபரபரப்பாக பேசப்பட்ட அதிகாரிகளில் ஒருவர்), வி.ஐ.பி. பாதுகாப்புப் பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

திருவல்லிக்கேணி துணை கமிஷனராக சின்னராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பதவி உயர்வு பெற்றுஇப்பதவிக்கு வருகிறார்.

Christopher Nelsonஅடையாறு துணை கமிஷனர் வரதராஜுலு, திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராகநியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆயுஷ்மணி திவாரி, அடையார் துணைகமினஷராகிறார்.

மொத்தம் 21 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திலகவதி மற்றும் கிருஸ்டோபர் நெல்சனின் மாறுதல்கள் தான் இதில் முக்கியமானவை. லஞ்ச ஒழப்புத்துறைடிஜிபியாக இருந்த திலவதியை அந்தப் பதவயில் இருந்து தூக்கிவிட்டு அவரது முன்னாள் கணவர் நாஞ்சில்குமரனை டிஜிபியாக்கினார் முதல்வர் ஜெயலலிதா.

இதனால் மகளிர் காவல் நிலையங்களுக்கான கூடுதல் டிஜிபியாக மட்டும் இருந்த திலகவதி வெறுப்புடன் தான்பணியாற்றி வந்தார். இப்போது அதிலிருந்தும் தூக்கப்பட்டு முக்கியத்துவம் இல்லாத கடலோர பாதுகாப்புக்கானகூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போல கருணாநிதி கைது சம்பவத்துக்குப் பின் கிருஸ்டோபர் நெல்சனை மாற்றக் கோரி மத்திய அரசுஎவ்வளவோ நெருக்குதல் கொடுத்தும் அதை ஜெயலலிதா ஏற்கவில்லை. தொடர்ந்து திருவல்லிக்கேணி துணைக்கமிஷ்னராகவே பதவியில் இருந்தார். சமீபத்தில் நடந்த ரூ. 1,25 கோடி கொள்ளைச் சம்பவத்தில் கூட மிகத்துரிதமாக செயல்பட்டு நகைகளை மீட்டார் நெல்சன்.

Thilagavathi with Jayalalithaa
ஜெயலலிதாவுடன் திலகவதி ஐ.பி.ஸ்

இதனால் ஜெயலலிதாவிடம் நெல்சனுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்விஐபி பாதுகாப்புப் பிரிவுக்குத் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.

பணம் கொழிக்கும் அடையாறு துணை கமிஷனர் பதவியில் இருந்த வரதராஜுலு திருவள்ளூர் மாவட்டஎஸ்.பியாக்கப்பட்டுள்ளார். இதுவரை அடக்கியே வைக்கப்பட்டிருந்த ஆயுஷ்மணி திவாரிக்கு விமோச்சனம்கிடைத்துள்ளது. மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் பெற்று அடையார் துணை கமினஷராகிவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X