• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆதரவற்ற குழந்தைகளை மகிழ்வித்த கலாம்

By Super
|

சென்னை:

சென்னையில் இன்று தனது முதல் நிகழ்ச்சியாக ராமகிருஷ்ணா மடத்திற்குச் சென்று அங்குள்ள ஆதரவற்றகுழந்தைகளைச் சந்தித்தார் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். அவர்களுடன் ஒரு மணிநேரம்கலந்துரையாடினார்.
Abdul kalam in Ramakrishna mutt

மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் கலாம்

அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை குழந்தைகள் கேட்டனர். காலை 8.45 மணிக்கு அங்கு வந்த கலாமைமாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவரது வருகையால் ராமகிருஷ்ணர் ஆஸ்ரம குழந்தைகள்இடையே பெரும் மகிழ்ச்சி புரண்டோடியது.

மேடையில் பேசிக் கொண்டிருந்த கலாம், தனது உரையை முடித்துக் கொண்டு விடுவிடுவென கீழே இறங்கினர்.தனது பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு குழந்தைகளோடு போய் கலந்தார். இதனால் பாதுகாப்புஅதிகாரிகள் பதற்றமடைந்தனர்.

தங்கள் அருகே கலாம் வந்ததால் ஆனந்தமடைந்த அந்த ஆதாரவற்ற குழந்தைகள் அவருடன் போட்டி போட்டுக்கொண்டு கைகுலுக்கினர். அவர்களிடம் படிப்பு விவரம் குறித்து கேட்டறிந்தார்.

அவரிடம் ஒரு மாணவன், நீங்கள் விமான ஆராய்ச்சியாளராக காரணமாக அமைந்தது எது என்று கேட்டான்.

அவனுக்கு கலாம் பதிலளிக்கையில், அழகான வானத்தில் மிக உயரமாகப் பறக்கும் பறவைகள் தான் இதற்குக்காரணம். அவை எனக்குள் எழுப்பிய கேள்விகளால் தான் விமான ஆராய்ச்சியாளரானேன். எங்கள் பள்ளியின் 5ம்வகுப்பு அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் எங்களுக்கு பறவைகள் பறப்பது குறித்து பாடம் நடத்தினார்.

அப்போது நான் எழுந்து எனக்கு அவர் சொல்வது புரியவில்லை என்றேன். என்னை ராமேஸ்வரம் கடற்கரைக்குஅழைத்துச் சென்றார். பரந்து விரிந்த வானத்தில் இறக்கையடித்துப் பறந்த பறவைகளைக் காட்டி விளக்கினார்.அப்போது எனக்கு வயது 10. பறவைகள் எனக்குள் அப்போது பரவசத்தை மூட்டின. அந்தச் சம்பவம் தான் நான்பிற்காலத்தில் விமான ஆராய்ச்சியாளாக உருவெடுக்கக் காரணமாக இருந்தது என்றார்.

அடுத்து ஒரு சிறுமி கலாமிடம் கேட்ட கேள்வி அனைவரையும் அவளை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது.ஜனாதிபதி சார், மாதா-பிதா-குரு-தெய்வம், இவர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது யார் என்று கேட்டாள்.

அவளை கூர்ந்து சில நொடிகள் பார்த்த கலாம், குரு தான் எனக்கு மிகவும் பிடித்தவர். ஏன் தெரியுமா?. எனக்குநல்ல பெற்றோர் கிடைத்தனர். ஆனால், சிவசுப்பிரமணிய ஐயர் என்ற ஒரு மிகச் சிறந்த குரு கிடைத்ததால் தான்நான் இந்த அளவுக்கு உயர்ந்தேன். என் வளர்ச்சிக்கு குருவே காரணம் என்றார்.

ஒரு மாணவனின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், வாழ்க்கையில் வெற்றி பெற 3 வழிகள் உள்ளன. டாக்டர்ஆக வேண்டும், என்ஜீனியர் ஆக வேண்டும், இசை மேதை ஆக வேண்டும், விஞ்ஞானி ஆக வேண்டும் என்றுஏதாவது ஒரு லட்சியத்தை வகுத்துக் கொள்ள வேண்டும், இரண்டாவது, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தகடுமையாக பாடுபட வேண்டும், மூன்றாவது, தோல்வியைக் கண்டு அஞ்சக் கூடாது. எத்தனை முறை தோற்றாலும்மீண்டும், மீண்டும் முயற்சித்துக் கொண்டேயிருக்க வேண்டும். தோல்விதான் வெற்றிக்கு படிக்கல். தோல்வியைதோற்கடிக்கும் வரை முயற்சி தொடர வேண்டும்.

இந்த மூன்றும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றார்.

மாணவர்களுக்கு உங்களின் செய்தி என்ன என்ற இன்னொரு மாணவனின் கேள்விக்கு, ஒவ்வொருவரும்குறைந்தபட்சம் 2 மரங்களையாவது நட வேண்டும், விடுமுறை நாட்களில் தங்களது ஊருக்கு அருகே உள்ளகிராமங்களுக்குச் சென்று அங்குள்ள எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக் கொடுக்கவேண்டும். நன்றாக படிக்க வேண்டும். மாணவப் பருவத்தில் படிப்பது மட்டுமே உங்களது கடமையாக இருக்கவேண்டும் நடுங்கள் என்றார்.

பின்னர் வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையத்தை கலாம் தொடங்கிவைத்தார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X