ஆபரேஷன் தியேட்டரில் பெண் சாவு: உறவினர்கள் போராட்டம்
சென்னை:
சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து கொள்வதற்காகஅனுமதிக்கப்பட்ட பெண் இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் போராட்டத்ஙஆல் இறங்கினர். இதனால்அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
பெரம்பூரைச் சேர்ந்தவர் கஸ்தூரி. 45 வயதான இவர், கர்ப்பப் பை நீக்க அறுவைச் சிகிச்சைக்காக அப் பகுதியில்உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அறுவைச் சிகிச்சை அறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. ஆனால்அடுத்த அரை மணி நேரத்தில் அவர் மரணமடைந்தார்.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், டாக்டர்களின் அளவுக்கு அதிகமான மயக்க மருந்துகொடுத்ததால் தான் கஸ்தூரி இறந்ததாகக் கூறி, மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பெரும் பதற்றமும் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து செம்பியம் போலீஸார் அங்கு விரைந்து வந்து உறவினர்களை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்,.
இதன் பின்னர் தான் அங்கு அமைதி திரும்பியது.


