மதுரையில் அவசரமாக தரையிறங்கிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையிலிருந்து சென்னைக்குக் கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகமீண்டும் மதுரை விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து மதுரைக்கு நேற்று பிற்பகல் 12.40 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. பின்னர்78 பயணிகளுடன் மதியம் 1.20 மணிக்கு மீண்டும் சென்னை கிளம்பியது. கிளம்பிய 15 நிமிடத்திற்குள்விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விமானம் மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கே திரும்பி வந்து அவசரமாக தரையிறங்கியது.
இதன் பின்னர் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் விமானம் மதுரைக்குத் திருப்பி விடப்பட்டது. அதில்78 பயணிகளும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications