For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக அரசை கலைக்க எல்லா காரணங்களும் உள்ளன: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞச ஒழிப்புப் போலீசார் நடத்திய ரெய்ட், முதல்வர் ஜெயலலிதாவின்அரசியல் பழிவாங்கல் போக்கையே காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:

தமிழக அரசைக் கலைப்பதற்கான எல்லா காரணங்களும் உள்ளன. கலைக்க வேண்டிய தருணமும் வந்துவிட்டது.ஆனால், கலைக்க வேண்டும் என்று நான் கோர மாட்டேன்.

அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்வது, அடக்குமுறையைக் கையாள்வது என ஒரு ஜனநாயக அரசுஎதையெல்லாம் செய்யக் கூடாதோ அதையெல்லாம் செய்து வருகிறார் ஜெயலலிதா.

இன்று திமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டிலும் திமுக ஆட்சி கால அதிகாரிகள் வீட்டிலும் போலீஸ் சோதனைக்குஉத்தரவிட்டிருக்கிறார் ஜெயலலிதா. தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியது தான். அதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.

இந்தச் சோதனைகள் முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறொன்றுமல்ல. இதைசட்டரீதியாக திமுகவினர் சந்திப்பார்கள்.மடியில் கனமில்லை, இதனால் பயமும் இல்லை.

இந்த அரசு பதவிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுகவினரின் வீடுகளில் தொடர்ந்து ரெய்டுகள்நடத்தப்பட்டும் கூட, இதுவரை யார் மீதும் குற்றப் பத்திரிக்கைக் கூட தாக்கல் செய்யப்படவில்லை.

அரசு ஊழியர்கள் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தது ஜனநாயக விரோதச் செயல். தொழிலாளர்களின்குரலை அரசுக்கு எடுத்துச் செல்லும் சாதனமாக சங்கங்கள் இருந்தன. இப்போது அதுவும் பறிபோய்விட்டது. இந்தஉரிமை பறி போனதற்கு தொழிற்சங்கங்கள் கொடுத்த இடம் தான் காரணம். கொட்டக் கொட்டக் குனிந்தார்கள்.அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்குத் தரப்பட்ட சலுகைகளைப் பறித்தது அதிமுக அரசு. அதே நேரத்தில்கடமையை மறந்து செயல்பட வேண்டும் என நாங்கள் சொன்னது கிடையாது. கடமையைச் செய், உரிமையைப்பெறு என்று தான் பெரியார், அண்ணா காலத்தில் இருந்து நாங்கள் கடைபிடித்து வந்திருக்கிறோம்.

இப்போது நடக்கும் அநியாயங்கள் அத்தனையும், இந்த ஆட்சி மாறி திமுக தலைமையில் ஆட்சி அமையும்போதுமாற்றப்படும் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X