கர்ப்பப் பையில் இருந்து 7 கிலோ கட்டி !
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணத்தில், ஒரு பெண்ணின் கர்ப்பப் பையில் இருந்து 7 கிலோ கட்டி அறுவைச் சிகிச்சை மூலம்அகற்றப்பட்டது.
கும்பகோணம் அருகே உள்ள ரகுநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டம்மாள். இவர் கடுமையான வயிற்று வலிகாரணமாக அரசு மருத்துவமனையில் 7 வாரங்களுக்கு ன் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடந்த பரிசோதனைகளில், பட்டம்மாளின் கர்ப்பப் பையில் மிகப் பெரிய கட்டி இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது அவரது கர்ப்பப் பையில் இருந்து 7 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது. இவ்வளவு எடைகொண்ட கட்டி கர்ப்பப் பையில் உருவாகி இருப்பது மிகவும் அரிதான விஷயம் என டாக்டர்கள் குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications