• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைகோ பேசியது என்ன?: பொடா நீதிமன்றத்தில் இன்று மதுரை போலீசார் ஆஜர்

By Staff
|

சென்னை:

பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மதிமுகவினர் 8 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி பொடாநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன்மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந் நிலையில் காவல் நீட்டிப்புக்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் 8 மதிமுகவினரும் இன்றுபூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்யப்படுகிறார்கள். இவர்களில் வைகோ வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். மற்ற 8 பேரும் மதுரை, திருச்சி, சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மதுரை திருமங்கலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோவும் மற்றவர்களும் என்னபேசினார்கள் என்பது குறித்து போலீஸ் தரப்பில் விளக்கம் தர 5 மதுரை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

அவர்களும் இன்று பொடா நீதிமன்றத்தில் ஆஜராகி வைகோ என்ன பேசினார் என்பது குறித்து விளக்கம் தரஉள்ளனர். திருமங்கலத்தில் மதிமுக கூட்டம் நடந்தபோது பாதுகாப்புப் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தங்கவேல்,சப்-இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், இன்னொரு சப்-இன்ஸ்பெக்டர், பழனி, பாண்டி ஆகிய இரு போலீசார்இதற்காக இன்று பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X