தமிழில் பாஸ்போர்ட் அலுவலக இணையத் தளம்: நாட்டிலேயே முதல் முறை
சென்னை:
நாட்டிலேயே முதல் முறையாக மாநில மொழியில் (தமிழில்) பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணைய தளம்உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் தான் இந்த இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைhttp://passport.tn.nic.in/tamil என்ற முகவரியில் பார்க்கலாம்.
வெளியுறவுத்துறை இணையமைச்சர் வினோத் கன்னா இதனை துவக்கி வைத்தார். பாஸ்போர்ட் பெறுவது குறித்தவிதிமுறைகள், விளக்கங்கள், தத்கல் முறையில் பாஸ்போர்ட் பெறும் முறை, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்முறை, பாஸ்போர்ட்டை நீட்டித்தல் ஆகியவை குறித்து தமிழிலேயே விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
பாஸ்போர்ட் காணாமல் போனால் என்ன செய்வது, உறுதிமொழிப் பத்திரம் உள்பட பாஸ்போர்ட்டுக்குவிண்ணப்பம், விண்ணப்பிக்கும்போது உடன் தர வேண்டிய சான்றுகளின் மாதிரிப் படிவங்கள் ஆகியவற்றைடெளன் லோட் செய்து கொள்ளும் வசதியும் இந்தத் தளத்தில் உள்ளது.
இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து உரிய கட்டணத்துக்கான டிடியையும் வைத்து நேரடியாகவேபாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.












Click it and Unblock the Notifications