For Daily Alerts
Just In
அதிமுக பொது செயலாளர் தேர்தல்: மீண்டும் ஜெ. தேர்வாகிறார்
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் என முதல்வரும்,கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு செப்டம்பர் 10ம் தேதி தேர்தல் நடைபெறும். அதில் போட்டியிட விரும்பும்அதிமுகவினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
தேர்தல் அதிகாரியாக நிதியமைச்சர் பொன்னையன் செயல்படுவார் என்று கூறியுள்ளார்.
மீண்டும் ஜெயலலிதாவே பொதுச் செயலாளராவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரை எதிர்த்து யாரும்போட்டியிடப் போவதில்லை.


