கேபிள் டிவி: செட் டாப் பாக்ஸ் வாங்க தமிழகத்தில் ஆர்வம் இல்லை
சென்னை:
சன் டிவி, ஜெயா டிவி, பொதிகை, தமிழன், விண் ஆகிய சேனல்கள் இலவசமாகக் கிடைப்பதாலும், கட்டணசேனல்களாக இருந்த ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ், கே டிவி, சன் நியூஸ் ஆகியவையும் இலவச சேனல்களாகமாற்றப்பட்டு விட்டதாலும் செட் டாப் பாக்ஸ் வாங்க சென்னையில் பெரும்பாலான மக்கள் முன் வரவில்லை.
கட்டினால் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலையில் உள்ள பிற சேனல்களைப் பார்க்க மக்களிடம் ஆர்வமும்இல்லை. தமிழக மக்களின் அபிமான சேனல்கள் அனைத்தும் இலவச சேனல்களாக இருப்பதால் செட் டாப் பாக்ஸ்வாங்கத் தேவையில்லை என்று பொதுமக்கள் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
வேண்டிய சேனல்களை மட்டும் பார்க்கும் முறை (சி.ஏ.எஸ்) சென்னையில் நேற்று முதல் அமலுக்கு வந்தது.இதையடுத்து கட்டண தொலைக்காட்சி சேனல்கள் அனைத்துப் பகுதிகளிலும் ரத்து செய்யப்பட்டன.
சி.ஏ.எஸ். முறை மூலம் கட்டண சேனல்களை பார்க்க விரும்பும் வாடிக்கையாளர்கள், செட் டாப் பாக்ஸ் வாங்கவேண்டும். இதன் மூலம் விரும்பிய சானல்களுக்கு மட்டும் பணம் கொடுத்துப் பார்க்கலாம். இதுதவிர 30க்கும்மேற்பட்ட இலவச சேனல்களையும் பார்க்கலாம்.
சி.ஏ.எஸ். முறை சென்னையில் அமல்படுத்தப்பட்ட போதிலும், ரூ. 3,500 மதிப்பு கொண்ட செட் டாப் பாக்ஸ்கள்வாங்க பொதுமக்களிடையே ஆர்வமே இல்லை. காரணம், இலவச சானல்கள் பட்டியலில், அவர்களுக்குப்பிடித்தமான அனைத்து சானல்களும் இடம் பெற்றிருப்பதுதான்.
மற்றபடி குறிப்பாக ஸ்டார், ஸீ போன்ற சேனல்களையும் பிற ஆங்கில, இந்தி, செய்தி, கார்ட்டூன், மூவிஸ் போன்றசேனல்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே இந்த செட் டாப் பாக்ஸ்களை வாங்கிவருகின்றனர்.
சென்னையில் கேபிள் டிவிக்காரர்களின் (திருட்டு) கணக்குப்படி 11 லட்சம் கேபிள் இணைப்பு பெற்ற வீடுகள்உள்ளன. (இந் எண்ணிக்கை நிச்சயம் 40 லட்சமாவது இருக்கும்). ஆனால், இதுவரை செட் டாப் பாக்ஸ் வாங்க முன்வந்துள்ளவர்கள் வெறும் 10 சதவீதம் பேர் தான்.
இதுவரை சுமங்கலி கேபிள் விஷன் வெறும் 1,500 செட் டாப் பாக்ஸ்களை மட்டுமே விற்க முடிந்துள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications