For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரதட்சணை கொடுமை: பெண் போலீசாரால் அலைகழிக்கப்பட்ட பெண் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

வரதட்சக்ை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வழக்கைப் பதிவு செய்யாமல் மகளிர் காவல் நிலையப்போலீசாரும், ஹெலப் லைன் பிரிவு போலீசாரும் அலைகழித்ததால் நொந்து போன அந்தப் பெண் தற்கொலைசெய்து கொண்டார்.

இதையடுத்து கடமையைச் செய்யத் தவறிய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் ஏட்டு சஸ்பெண்ட் ஆகியோர்செய்யப்பட்டனர். இன்னொரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேஸ்வ. இவருக்கும் சங்கர் என்பவருக்கும் திருமணம் நடந்தது.திருமணத்திற்குப் பிறகு வரதட்சணை கேட்டு சங்கரும், அவரது குடும்பத்தினரும், முருகேஸ்வயைக்கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இதையடுத்து ஹெல்ப் லைன் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கச் சென்றார். (ஆபத்தில் இருக்கும் பெண்கள்,குழந்தைகளுக்கு அவசர உதவி செய்ய உருவாக்கப்பட்ட போலீஸ் பிரிவு தான் ஹெல்ப் லைன். பெரும்பாலும்பெண் போலீசார் தான் இதில் உள்ளனர்.)

ஆனால், முருகேஸ்வரியிடம் லஞ்சம் எதிர்பார்த்த ஹெல்ப் லைன் பிரிவு பெண் போலீசார் புகாரை வாங்கமறுத்தனர். இவரால் பணம் தர முடியாது என்பதால் வழக்கை வாங்காமல் மகளிர் காவல் நிலையத்துக்குப்போகுமாறு கூறினர்.

இதையடுத்து மதுரை நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகியுள்ளார் முருகேஸ்வரி.

அங்கும் லஞ்சம் எதிர்பார்த்த பெண் போலீசார், இவர் பணம் தரும் நிலையில் இல்லை என்பதால் தரக் குறைவாகநடத்தினர். இங்கே எதுக்குடி வந்தே, ஹெல்ப் லைன் போலீஸ்கிட்ட போ என பெண் சப் இன்ஸபெக்டர்ஷோபனாவும், ஏட்டு சந்திராவும் முருகேஸ்வரியை விரட்டியடித்தனர்.

மீண்டும் ஹெல்ப் லைன் போலீசுக்குப் போன முருகேஸ்வரியை பார்த்து எரிச்சலான பெண் போலீசார், நாங்க தான்மகளிர் காவல் நிலையம் போகச் சொன்னோம் இல்ல, ஏன் இங்கே வந்தே என்று கூறி மோசமான வார்த்தைகளால்திட்டியுள்ளனர்.

இதைத் தொடர்து மகளிர் காவல் நிலையத்துக்கு முருகேஸ்வரி மீண்டும் செல்ல, அங்கும் திட்டும்அவமரியாதையும் தான் கிடைத்தது.

இதனால் துவண்டு போய் தனது பெற்றோரிடம் சென்ற முருகேஸ்வரி தனக்கு கணவராலும், காவல்நிலையங்களிலும் ஏற்பட்ட கொடுமையைச் சொல்லி அழுதுள்ளார்.

அவரை பெற்றோர் சமாதானப்படுத்தினர். ஆனால், இந் நிலையில் முருகேஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டர். சாகும் முன் காவல் நிலையங்களி தான் அவமானப்படுத்தப்பட்டதை விரிவாக எழுதி வைத்தார்முருகேஸ்வரி.

இதையடுத்து முருகேஸ்வரி எழுதி வைத்து கடிதத்துடன், சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மதுரைபோலீஸ் கமிஷ்னரைச் சந்தித்து மனு கொடுத்தனர் அவரது பெற்றோர்.

மேலும் இந்தத் தற்கொலை குறித்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியின் விசாரணையும் நடந்தது. அதில்முருகேஸ்வரியை ஹெல்ப் லைன் பெண் போலீசாரும், மகளிர் காவல் நிலைய போலீசாரும் அலைகழித்ததும்,அவமானப்படுத்தியதும் உண்மையே என்று தெரியவந்தது.

குறிப்பாக மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸபெக்டர் அதில் ஷோபனாவும் ஏட்டு சந்திராவும் முருகேஸ்வரியிடம்மிக மோசமாக நடந்து கொண்டது உறுதியானதுய இதையடுத்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.ஹெல்ப் லைன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏட்டு மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனமுருகேஸ்வரியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X