For Quick Alerts
For Daily Alerts
Just In
இது தா.கி. கதை
சிவகங்கை:
முதல்வர் ஜெயலலிதா சொன்ன இரண்டாவது கதையில் முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலையை மறைமுகமாககுறிப்பிட்டார்.
அந்தக் கதை இதுதான்:
ஒரு ஊரைச் சேர்ந்த இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் சொன்னார், நாம் எங்காவது வேற்றுக் கிரகத்திற்குசென்று வர வேண்டும் என்று. அவரே, செவ்வாய் கிரகத்திற்குப் போகலாமா என்று ஆலோசனையும் கேட்டார்.
அதற்கு மற்றவர், அதெல்லாம் சாதாரண மனிதர்கள் போவது, நாம் பெரியவர்கள் அல்லவா? எனவே, சூரியனுக்குப்போகலாம் என்று கூறியுள்ளார்.
குறுக்கிட்ட முதல் நபர், சூரியனுக்கா? சூரியனை யார் நெருங்கினாலும் அது கொன்று பொசுக்கி விடுமே என்று கூறியுள்ளார்.
அப்போது இரண்டாவது நபர் கூறினார்: நாம் பகலில் போக வேண்டாம், இரவில் போகலாம் என்று.


