For Daily Alerts
Just In
ஆத்திரத்தில் மனைவியின் மூக்கை கடித்த கணவர் கைது!
சென்னை:
மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின்போது, ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் மூக்கைக் கடித்து எடுத்துவிட்டார்.
சில நாட்களுக்கு முன் குடிப்பதற்கு பணம் கேட்டு வசந்தாவுடன் சண்டை போட்டுள்ளார் சேசுராஜ். வசந்தா பணம்கொடுக்க மறுத்துள்ளார். உன்னைக் கல்யாணம் செய்ததே தப்பு, எல்லாம் என் தலைவிதி என்று கூறி அழுதுள்ளார்வசந்தா. இந்த வார்த்தையைக் கேட்டதும் கோபமடைந்துள்ளார் சேசுராஜ்.
வசந்தாவை தாறுமாறாக அடித்து உதைத்த அவர், ஆத்திரத்தில் அவரது மூக்கைக் கடித்தார். இதில் மூக்குதுண்டானது.
கடிபட்ட மூக்குடன் துடிதுடித்த வசந்தா, பின்னர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில்போலீஸார் சேசுராஜைக் கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மூக்கை இழந்த வசந்தா குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

