கிணற்றில் விழுந்து சிறுவன் பலி: கிரிக்கெட் விளையாடியபோது விபரீதம்
தஞ்சாவூர்:
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றுக்குள் விழுந்து, விஷ வாயு தாக்கி இறந்தான்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நிலுவைக் குளத்தைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவரின் மகன் அப்துல் ஜலீல்(வயது 7). இவன் 2ம் வகுப்பு படித்து வந்தான். காலாண்டு விடுமுறைக்காக தஞ்சாவூர் தென்றல் நகரில் உள்ளபாட்டி வீட்டுக்கு வந்திருந்தான்.
நேற்று அப் பகுதி சிறுவர்களுடன் கிரிக்கெட் விழையாடிக் கொண்டிந்தான். அப்போது பந்து ஒரு கிணற்றின் மீதுவிழுந்தது. 120 அடி ஆழம் கொண்ட அந்த கிணறு காய்ந்து போயுள்ளது. அந்தக் கிணற்றின் மீது கம்பி வலைபோடப்பட்டிருந்தது.
பந்து அந்த வலை மீது விழுந்ததையடுத்து அதை எடுக்க அப்துல் ஜலீல் ஏறினான். துருப்பிடித்துப் போயிருந்தஅந்த கம்பி வலை உடைந்தது. இதையடுத்து ஜலீல் கிணற்றுக்குள் விழுந்தான்.
120 அடி கீழே விழுந்த இதில் அவனது தலையில் பலத்த அடிபட்டு மயங்கினான். தொடர்ந்து கிணற்றுக்குள் இருந்தவிஷ வாயுவும் தாக்கியது. இதனால் அவனுக்கு மூச்சுத் திணறல் ஏபட்டது.
உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது. முகக் கவசத்துடன் கீழே இறங்கிய தீயணைப்புப்படையினர் அந்தச் சிறுவனை மீட்டனர். அப்போது அவனுக்கு உயிர் இருந்தது. உடனே அவன்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். ஆனால், வழியிலேயே அவன் இறந்துவிட்டான்.

