For Daily Alerts
Just In
மகாத்மா, பெருந் தலைவருக்கு தலைவர்கள் அஞ்சலி
சென்னை:
மகாத்மா காந்தி, பெருந் தலைவர் காமராஜர் ஆகியோருக்கு தமிழகத்தில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
அக்டோபர் 2ம் தேதி, மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மற்றும் காமராஜரின் நினைவு நாளாகும்.
இதையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு ஆளுனர் ராம் மோகன் ராவ்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல, சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள் பன்னீர்செல்வம்,பொன்னையன் உள்ளிட்டோரும் காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு சர்வ சமயபிரார்த்தனையும் நடந்தது.
காங்கிரஸ் தலைவர்கள் சோ.பாலகிருஷ்ணன், இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே.வாசன்ஆகியோரும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தி.நகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் நினைவிடத்தில் வாசன் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள்அஞ்சலி செலுத்தினர்.

